1. Home
  2. கோலிவுட்

அடம் பிடித்து செய்த 2 கோடி தண்ட செலவு.. தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய வடிவேலு

அடம் பிடித்து செய்த 2 கோடி தண்ட செலவு.. தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய வடிவேலு

வைகைப்புயல் வடிவேலு இப்போது தான் ரெட் கார்டு தடை நீங்கி படுஜோராக தனது பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் டிவி சிவானியும் நடித்து வருகிறார்.

இது தவிர மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களிலும் வடிவேலு நடித்து வருகிறார். இவ்வாறு பழையபடி மீண்டும் ஃபுல் ஃபார்ம்க்கு வந்து வடிவேலு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்போது வடிவேலு டாப் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்தி கேட்கிறாராம்.

அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு வடிவேலு கோடிகளில் சம்பளம் கேட்டாராம். அதன்படி இந்த படத்திற்கு 4 கோடி அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பிறகு தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கி உள்ளார் வடிவேலு.

அதாவது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் எனக்கு ஒரு பாடல் பண்ண வேண்டும் என வடிவேலு அடம் பிடித்துள்ளார். எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் வடிவேலு பிடிவாதமாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளரும் இதற்கு ஒத்துக்கொண்டாராம்.

இந்த பாடலுக்காக ரெண்டு கோடி மதிப்பிலான செட் அமைந்து மும்பை மாடல் அழகியை வைத்து எடுத்துள்ளனர். ஆனால் பாடல் எடுத்த பிறகு படத்தில் இந்தப் பாடலை எங்கு வைப்பது என்று தெரியாமல் படக்குழு குழம்பி உள்ளனர். கடைசியில் படம் முடிந்த பிறகு இறுதியில் இந்த பாடலை வைத்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் எந்த அளவுக்கு கவரும் என்பது சந்தேகம்தான். கிட்டத்தட்ட 2 கோடிக்கு மேல் தண்ட செலவாக போய் உள்ளது என வடிவேலு மீது தயாரிப்பாளர் செம காண்டில் உள்ளாராம். ஆகையால் படம் வெளியான பிறகு வடிவேலை பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் உள்ளாராம்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.