Comedian Vadivelu: கவுண்டமணி- செந்திலுக்குப் பிறகு நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர் தான் வைகை புயல் வடிவேலு. இவர் மக்கள் நெஞ்சில் காமெடியில் இடம் பிடித்திருந்தாலும், தற்பொழுது இவரின் செயலை குறித்து வெளிவந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
சப்போர்ட்டிங் ரோலிலும், காமெடிகளிலும் தமிழ் சினிமாவில் இடம்பெற்றவர்தான் மீசை ராஜேந்திரன். இவர் வடிவேலு உடன் இணைந்து கலக்கிய காமெடிகள் ஏராளம். அவ்வாறு சக நடிகராய் இருந்த இவர் வடிவேலுவின் உண்மை முகம் இதுதான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சினிமாவில் தித்திக்க தித்திக்க பேசி பழகும் வடிவேலுவா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு மீசை ராஜேந்திரன் சொல்லும் குற்றச்சாட்டு வியப்படையச் செய்கிறது. அவ்வாறு சக நடிகர்களின் வளர்ச்சியை பிடிக்காமல், தன் உதவியை எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பவர்களை தான் தன்னிடம் வைத்திருப்பாராம்.
சற்று எதிர்த்து பேசினால் இனி நீ வேலைக்கு ஆக மாட்டாய் என்று கூறி திருப்பி அனுப்பி விடுவாராம். அவ்வாறு இவர் மேற்கொண்ட இத்தகைய செயல்தான் சினிமாவில் இவர் மார்க்கெட்டை இழக்கச் செய்தது. பார்ப்பவர்கள் இவரா இது என கேட்கும் அளவிற்கு வெளிவேஷம் போடுவதில் வல்லவர் எனவும் மீசை ராஜேந்திரன் வடிவேலுவை வன்மையாக சாடினார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடன் பயணித்த நகைச்சுவை நடிகரான விவேக்கின் வளர்ச்சியை பிடிக்காமல் அவர் இறப்புக்கு பின் அவர் சாவுக்கு கூட செல்லாத கொடுமைக்காரராக இருக்கிறார். மேலும் அதன்பின் ஊரே போற்றிய மயில்சாமியின் சாவுக்கு கூட போகவில்லை.
சமீபத்தில் இறந்த மனோபாலாவின் இறப்பிற்கும் இவர் சொல்லவில்லை. என்னதான் பகையாக இருந்தாலும் சக நடிகரின் சாவிற்கு கூட போகாத இவர் எல்லாம் ஒரு மனிதனா என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார் மீசை ராஜேந்திரன். சந்திரமுகி படத்தில் கூட வடிவேலு- மனோபாலா இணைந்து நடித்திருப்பார்கள். அவ்வாறு இருக்க ஒரு மனிதாபிமானம் கூட இல்லாமல் அவர் சாவுக்கு போகாமல் இருந்து வருகிறார் வடிவேலு. இது போன்ற மனிதருக்கு இனிமேல் ரீ என்ட்ரி என்பதே கிடையாது என தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் மீசை ராஜேந்திரன்.