பந்தாவாக பேசி பேட்டி கொடுத்த வடிவேலு.. எதிர்பார்த்து ஏமாந்து போன நடிகரின் பரிதாப நிலை

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் வடிவேலு அசுர வேகத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் இப்போது சந்திரமுகி 2, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கும் இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் மீது ஒரு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு காமெடி நடிகர் போண்டாமணி உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் அவரின் நிலை பற்றி பல செய்திகள் ஊடகங்களில் பரவியது. அதை தொடர்ந்து பல நடிகர்களும் அவருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இதை கேள்விப்பட்ட வடிவேலுவும் மீடியாக்களின் முன் போண்டாமணிக்கு என்னால் முடிந்த பண உதவியை செய்வேன் என்று பந்தாவாக பேசி பேட்டி கொடுத்திருந்தார்.

ஆனால் இப்போது வரை அவரிடம் இருந்து போண்டாமணிக்கு எந்த உதவியும் வரவில்லையாம். இதுதான் தற்போது திரையுலகில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. வடிவேலு நடிக்கும் திரைப்படங்களில் அவருடன் இணைந்து போண்டாமணி, அல்வா வாசு, முத்துக்காளை போன்ற பல நடிகர்களும் நடிப்பார்கள்.

அந்த குரூப் இல்லாமல் வடிவேலுவின் எந்த படங்களும் வெளிவராது. அந்த அளவுக்கு அவர்கள் வடிவேலுவின் அரவணைப்பில் இருந்தனர். தற்போது அவர்களுக்கே ஒரு பிரச்சினை வரும்போது வடிவேலு இவ்வளவு மெத்தனம் காட்டுவது ஏன் என்று கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஆனால் போண்டா மணி தரப்பிலிருந்து வடிவேலு தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் விரைவில் எங்களுக்கு உதவுவார் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் பேச்செல்லாம் பந்தாவாகத்தான் இருக்கு, ஆனா செயல்ல ஒண்ணுமே இல்லை என்று வடிவேலுவை பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர்.