பல கோடி பணத்தை வாரி தின்னு ஏப்பம் விட்ட வடிவேலு.. மோசமாய் இம்சை கொடுக்கும் புலிகேசி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு இப்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் என்று இவருடைய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்னும் சில திரைப்படங்களில் கூட இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு பஞ்சாயத்து ஒன்று இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறதாம். வடிவேலு சில வருடங்களுக்கு முன்பு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தை தொடர்ந்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.

அதற்காக அவருக்கு நான்கு கோடி ரூபாய் முன்பணமும் கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் சமயத்தில் வடிவேலு ஏகப்பட்ட பிரச்சனைகள் கொடுத்ததால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதனால் கொடுத்த முன் படத்தை வடிவேலுவிடம் கேட்டபோது அவர் தர மறுத்தார். இதுதான் மிகப்பெரிய பஞ்சாயத்தாக மாறியது.

தற்போது பல வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் வடிவேலு அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து கேட்டால் எனக்கு பெரிய பெரிய ஆட்களை எல்லாம் தெரியும் என்று அவர் பகிரங்கமாகவே மிரட்டல் விடுகிறாராம்.

ஏற்கனவே அவர் திமுக கட்சி சார்பில் பிரச்சாரம் செய்திருந்தார். அது மட்டுமல்லாமல் தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவர் இவ்வளவு திமிராக பேசுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

பணத்திற்கு பதில் படத்தில் நடித்துக் கொடுங்கள் என்று கூறினாலும் அவர் சம்மதிக்கவில்லையாம். இதனால் மொத்த பணமும் பறிபோன நிலையில் தயாரிப்பு நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது. இம்சை அரசன் பல வருடங்களாக கொடுக்கும் இந்த இம்சையை பற்றி தான் தற்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.