நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு தற்போது கோலிவுட்டின் பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதை அடுத்து பல திரைப்படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இதனால் வடிவேலுவின் ரீ என்ட்ரி அமோகமாக இருக்கிறது. ஆனால் இன்னும் அவர் நடித்த ஒரு படம் கூட வெளியே வரவில்லை. அதற்குள்ளாகவே இவருடைய அலப்பறை அதிகமாகி விட்டதாம். தற்போது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் அவருடைய தம்பி இணைந்து நடிக்கும் ஒரு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
அந்த திரைப்படத்தில் வடிவேலு தான் நடிக்க வேண்டும் என்று கே எஸ் ரவிக்குமார் மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக பேசியிருக்கிறார்.
இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் முதலில் முடியாது என்று மறுத்திருக்கிறார். அதன் பிறகு அவர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றியடைந்தால் 5 கோடி ரூபாய் தருகிறேன். அப்படி இல்லை என்றால் நாங்கள் தரும் சம்பளத்தை வாங்கி கொள்ளுங்கள் என்று சமாதானமாக பேசியிருக்கிறார். ஆனால் அதற்கு வடிவேலு முடியாது என்று விடாப்பிடியாய் இருந்திருக்கிறார்.
இதனால் தயாரிப்பாளர் தற்போது பெரும் யோசனையில் இருக்கிறார். அந்த தயாரிப்பாளரிடம் இவ்வளவு கெடுபிடியாக பேசும் வடிவேலு தற்போது உதயநிதியுடன் இணைந்து நடிக்கும் மாமன்னன் படத்தில் ஒரு கோடி தான் சம்பளமாக வாங்கி இருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடித்து வரும் இந்த திரைப்படம் அரசியல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் வடிவேலு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுவரை காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த அவருக்கு இந்த படத்தில் குணச்சித்திர வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் தயாரிப்பாளர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்ட வடிவேலு தற்போது தன்னுடைய சம்பளத்தை அதிகப்படுத்தி இருக்கிறார். இதனால் திரையுலகில் ஆளைப் பார்த்து அவர் சம்பளம் பெறுகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.