மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை கேட்பதில்லை.. இது நாகரீகமா? ஆதங்கப்பட்ட வைரமுத்து

Vairamuthu : வைரமுத்துவின் பாடல் வரிகள் காலத்தாலும் அழியாதவையாக இருக்கிறது. இப்படியும் கவித்துவத்துடன் பாடல்கள் எழுத முடியுமா என வைரமுத்து பல பாடல்களை கொடுத்திருக்கிறார். இப்போது அவர் ஆதங்கம்பட்டு ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து தனது பாடல் வரிகள், அதிலும் குறிப்பாக பல்லவிகள் தனது அனுமதி இன்றி படங்களில் பயன்படுத்தப்பட்டது குறித்து ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார். என்னுடைய சில பாடல் வரிகளை பட தலைப்புகளாக பயன்படுத்தி இருக்கின்றனர்.

அந்தப் பாடல் வரிகள் தன்னிடம் மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை கேட்காமல் தலைப்புகளாக பயன்படுத்தப்பட்டதற்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். நிழல்கள் படத்தில் வைரமுத்து எழுதிய முதல் பாடல் பொன்மாலைப் பொழுது என்பது படத்தின் தலைப்பாக வந்தது.

படத் தலைப்புகள் பற்றி ஆதங்கப்பட்ட வைரமுத்து

இதே போல் கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊர தெரிஞ்சுகிட்டேன், ஈரமான ரோஜாவே, பூவே பூச்சூடவா, உயிரே, விண்ணை தாண்டி வருவாயா, தங்க மகன் என இப்படி இன்னும் பல பட தலைப்புகள் தன்னுடைய பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.

மேலும் இப்படி என்னுடைய பாடல் வரிகளை பயன்படுத்திய யாரையும் நான் கடித்துக் கொண்டதும் இல்லை, காணும் இடங்களில் கேட்டதும் இல்லை. செல்வம் பொதுவுடமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடமை ஆகிறதே என ஆக மகிழ்கிறேன்.

ஏன் என்னை கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரீகமாகாது. ஆனால் என்னை ஒரு வார்த்தை கேட்டு விட்டு செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா என வைரமுத்து வினவி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன இளையராஜா போல் இப்போது பாடல் வரிகளுக்கு வைரமுத்துவும் காப்புரிமை கேட்கிறாரா என்று விமர்சித்து வருகின்றனர்.