சிம்புவின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரைலர் நேற்று பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பில் இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஏகப்பட்ட விளம்பரங்கள் மற்றும் அலப்பறைகளுடன் வெளியான இந்த ட்ரெய்லர் தற்போது சில விமர்சனங்களை பெற்று வருகிறது. சிம்பு ஆக்சன் மற்றும் நடிப்பில் கலக்கி இருக்கும் இந்த படம் சில படங்களின் காப்பியா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
ஏனென்றால் ட்ரெய்லரின் ஆரம்பத்தில் அப்பாவியாக பல சோதனைகளை கடந்து வரும் சிம்பு ஒரு கட்டத்தில் டானாக மாறுவது போன்று காட்டப்பட்டிருக்கிறது. இது தமிழில் வெளிவந்த நாயகன், பாட்ஷா போன்ற படங்களை ஞாபகப்படுத்துகிறது.
மேலும் சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட கே ஜி எஃப் திரைப்படத்தை போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் தற்போது இந்த ட்ரெய்லரை கலாய்த்து மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் கே ஜி எஃப் ராக்கி பாயாக மாற சிம்பு ஆசைப்பட்டிருக்கிறார் என்றும் முத்து பாய் அப்படி என்னதான் செய்யப் போகிறார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படி நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும் தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படமாக வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
அதனால் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த படமும் நல்ல ரிசல்ட்டை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் பாதியில் சிம்பு டானாக மாறுவதற்கான காரணங்களும், இரண்டாம் பாதியில் முத்து பாயின் ஆட்டமும் காட்டப்பட இருக்கிறதாம். அந்த வகையில் இப்படம் கோலிவுட்டின் கே ஜி எஃப் என்பதில் சந்தேகம் இல்லை.