பழைய தரமான சப்போர்ட் மற்றும் குணச்சித்திர நடிகர் தமிழ் சினிமாவை விட்டு போய் 4 வருடம் ஆகிவிட்டது. ஒரு காலகட்டத்தில் எந்த படங்களும், இவர் நடிக்காமல் ரிலீஸ் ஆகாது என்ற அளவில் பீக்கில் இருந்தார் அந்த நடிகர். இப்பொழுது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கடும் பிஸியாக நடித்து வருகிறார்.
சுந்தர் சி வெங்கட் பிரபு படங்கள் என்றால் பெரும்பாலும் இந்த நடிகர் இருப்பார். ஆனால் இப்பொழுது இவர் வேற்று மொழிகளில் பிஸியாக இருப்பதால் தமிழில் நடிக்க முடியவில்லை. கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் 2021ஆம் ஆண்டு சுந்தர்சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 தான். அதன் பின் தமிழில் கஸ்டடி என்ற படத்தில் தலை காட்டியுள்ளார்.
பெரும்பாலும் சி ஐ டி ஆபிஸர், அசிஸ்டன்ட் கமிஷனர் போன்ற கதாபாத்திரத்தில் தான் தலைகாட்டியுள்ளார் இந்த வில்லன் நடிகர். 70 படங்களுக்கு மேல் நடித்தாலும் அதில் பாதி போலீஸ் கதாபாத்திரம் தான் இவருக்கு கிடைத்துள்ளது. வில்லத்தனம், காமெடி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி விடுவார்.
2006 ஆம் ஆண்டு திருப்பதி படத்தில் தமிழில் தனது திரைப்படத்தை ஆரம்பித்தவர் சம்பத் ராஜ். தாமிரபரணி, சேவல் போன்ற படத்தில் வில்லனாக இவர் அசத்தி இருப்பார். அதன்பின் வரிசையாக எல்லா படங்களிலும் நடித்தவர் இப்பொழுது தமிழில் பெரும்பாலும் நடிப்பதில்லை.
சுந்தர் சி மற்றும் வெங்கட் பிரபுவின் படத்தில் பெரும்பாலும் இவர் தலை காட்டுவார். அரண்மனை மூன்றில் ஜமீன்தாராக நடித்திருப்பார். வெங்கட் பிரபுவின் கோவா. 600028 , பிரியாணி, சரோஜா,கஸ்டடி போன்ற எல்லா படத்திலும் இவர் நடித்திருப்பார்.