வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்தது. அதிலும் கதையின் நாயகனாக நடித்திருந்த சூரியின் நடிப்பு படு மிரட்டலாக இருந்தது. நிச்சயம் அது ரசிகர்களுக்கான மிகப்பெரிய சர்ப்ரைஸ் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் அவர் இனிமேல் காமெடியன் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு தன் நடிப்புக்கு நியாயம் சேர்த்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது அவரைத் தேடி அடுத்தடுத்த ஹீரோ வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடிக்கும் சூரி அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணைய இருக்கிறார்.
ஆனால் இதில் தான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. என்னவென்றால் இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவது கிடையாது. அவரிடம் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கும் படத்திற்காக இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுத இருக்கிறாராம். ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து லாரன்சை வைத்து இவர் இயக்கா இருந்த படம் சில காரணங்களால் தடைப்பட்டு நிற்கிறது. அதனாலேயே வெற்றிமாறன் இப்போது தன் அசிஸ்டன்ட்டுக்கு உதவ முன் வந்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் தான் சூரி ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
அந்த வகையில் சூரி, வெற்றிமாறன் காம்போ தற்போது மீண்டும் இணைந்து இருக்கிறது. இது அடுத்தடுத்த படங்களுக்கும் தொடருமா என்ற ஒரு கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால் வெற்றிமாறனுக்கு யாரையாவது பிடித்து விட்டால் அவர்களை தன் அடுத்தடுத்த படங்களுக்கும் பயன்படுத்திக் கொள்வார்.
அந்த வகையில் விடுதலை படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சூரி இயக்குனரை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும் பொழுது சூரியை வெற்றிமாறனின் திரைப்படங்களில் அதிக அளவில் நாம் பார்க்க முடியும் என்று தெரிகிறது. தற்போது விடுதலை வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.