1. Home
  2. கோலிவுட்

இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா.. வெற்றிமாறனை டீலில் விடும் விஜய்


விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருட இறுதியில் அதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய இருக்கின்றனர். இதனால் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே அந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் விஜய்யின் கூட்டணி இப்போது இணைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே இவர்கள் சேர்ந்து படம் பண்ண போவதாக தகவல்கள் வெளியானது. அதற்கேற்றார் போல் வெற்றிமாறனும் விஜய்யை சந்தித்து ஒரு படத்திற்கான ஒன் லைன் ஸ்டோரியை கூறி இருக்கிறார். விஜய்க்கும் அந்த கதை பிடித்து போனதால் அதை டெவலப் செய்ய கூறியிருக்கிறார். தற்போது வெற்றிமாறன் அந்த கதையை எழுதி முடித்துள்ளார். ஆனாலும் அவர்களின் கூட்டணி தற்போது இணைந்து படம் பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கிறது. ஏனென்றால் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதே போன்று விஜய்யும் ரொம்ப பிஸியாக இருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது இன்னும் சில வருடங்கள் அவர்கள் இணைய முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் தற்போது வெற்றிமாறனிடம் சிறிது காலம் காத்திருங்கள் என்று கூறிவிட்டாராம். அதனால் விஜய்யை இயக்கும் ஆசையோடு இருந்த வெற்றிமாறன் தற்போது மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார். இருப்பினும் இவர்களின் கூட்டணி எப்படியும் இணையும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.