Maamanan: மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் வெற்றிமாறனும் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் தனது விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். வெற்றி இயக்குனராக மட்டுமே திகழ்ந்து வருபவர் வெற்றிமாறன்.
விடுதலை என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இவருடைய படங்களும் எப்போதுமே ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணம் வித்யாசமான கதைகளத்தை கொண்டு இருக்கும்.
இந்நிலையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தை பார்த்த வெற்றிமாறன், அருமையாக உள்ளதாக தனது கருத்தை கூறி இருக்கிறார். மேலும் இப்போது இந்திய அரசியலின் உண்மை நிலையை ஜாதி இயக்கவியல் உடன் மிகவும் நுணுக்கமாக மாரி செல்வராஜ் இந்த படத்தை கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகியோரின் நடிப்பு தன்னை கவர்ந்ததாக வெற்றிமாறன் புகழ்ந்து பேசி இருந்தார். கமல், தனுஷ் என பல பிரபலங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்து வரும் நிலையில் இப்போது வெற்றிமாறனும் மாமன்னன் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதனால் மாமன்னன் படத்தை இதுவரை பார்க்காத ரசிகர்கள் கூட பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. மேலும் முதல் நாளில் மாமன்னன் நல்ல வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இப்போது மாமன்னன் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. அதுமட்டுமின்றி இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மிக உயர்ந்த விலையில் கார் ஒன்றை உதயநிதி பரிசாக வழங்கி இருந்தார். இவ்வாறு மாமன்னன் கொண்டாட்டம் கோலாகலமாக சென்று கொண்டிருக்கிறது.