1. Home
  2. கோலிவுட்

விடுதலையால் ஓரம் கட்டப்பட்ட பத்து தல.. சிம்புவுக்கு வெற்றியா, தோல்வியா? மொத்த ரிப்போர்ட்

விடுதலையால் ஓரம் கட்டப்பட்ட பத்து தல.. சிம்புவுக்கு வெற்றியா, தோல்வியா? மொத்த ரிப்போர்ட்
விடுதலை படத்தால் பத்து தல ஓரம் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் இரு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்ததும் இந்த வசூல் குறைவுக்கு முக்கிய காரணம்.

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பத்து தல படம் ரிலீஸ் ஆனது. அதற்கு அடுத்த நாளே வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இந்த இரு படங்களையுமே ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

அந்த வகையில் விடுதலை திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்றது. அதற்கு மாறாக சிம்புவின் பத்து தல கலவையான விமர்சனங்களை பெற்றது. ஏனென்றால் படத்தில் ஏதோ ஒன்று குறைவதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இருப்பினும் சிம்புவின் ஆத்மார்த்தமான நடிப்பு வழக்கம் போல பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போது வரை 60 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும் போது முதலுக்கு மோசம் இல்லை என்ற அளவுக்கு லாபம் தான் கிடைத்திருக்கிறது.

ஆனால் சிம்புவின் கடந்த இரு படங்களின் வெற்றியை இது ஈடு கட்டியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு மிகப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் 100 கோடியை தாண்டி வசூல் லாபமும் பார்த்தது.

அதைத்தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் அமோக வெற்றியை பெற்றது. மேலும் 85 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்த இரு படங்களின் வசூலை வைத்து பார்க்கும் போது பத்து தல படத்தின் கலெக்சன் கொஞ்சம் குறைவு என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அந்த வகையில் விடுதலை படத்தால் பத்து தல ஓரம் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் இரு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்ததும் இந்த வசூல் குறைவுக்கு முக்கிய காரணம். அதனாலேயே இப்படம் சிம்புவுக்கு சறுக்கலை கொடுத்துள்ளது என திரை உலகில் பேசி வருகின்றனர். இருப்பினும் இது தோல்வி படம் கிடையாது என அவருடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.