Vignesh Shivan: அஜித்தின் படம் விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து காதல் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இதில் சீமானும் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த சூழலில் இப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட்டை காட்டிலும் அதிகமாக போய்க் கொண்டிருக்கிறது.
இதனால் தயாரிப்பாளர் லலித் இதற்கு மேலும் பட்ஜெட் அதிகமாக போனால் சமாளிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்போது ஷங்கர் நெஞ்சுக்கு விக்னேஷ் சிவன் பில்டப் கொடுத்து வருகிறாராம்.
தயாரிப்பாளரிடம் பெரும் தொகை கேட்கும் விக்னேஷ் சிவன்
இயக்குனர் ஷங்கர் எப்போதுமே தனது படத்தில் பிரம்மாண்டத்தை காட்டக்கூடியவர். ஒரு பாடலுக்கே பல கோடி செலவு செய்வார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய படங்கள் சரியாக போகவில்லை.
இப்படி இருக்கையில் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனின் படத்தில் ஒரு பாடலுக்கு ஐந்து கோடி கேட்டிருக்கிறாராம். இதைக் கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சியாகி விட்டாராம்.
ஏற்கனவே பட்ஜெட் எகிறிய நிலையில் இன்னும் ஐந்து கோடியா என விக்னேஷ் சிவனை காட்டும் காட்டி இருக்கிறார். படத்திற்கு அந்த பாட்டு ரொம்ப முக்கியம் என்று சொல்லி வருகிறாராம்.
ஆனால் தயாரிப்பாளர் அவ்வளவு பட்ஜெட் எல்லாம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். சிம்பிளாக பாட்டை எடுத்து முடித்து, படத்தையும் முடித்து கொடு என்று சொல்லிவிட்டார்.