இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் சிம்புவின் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இயக்குனர், பாடலாசிரியர் என்ற பன்முகத் திறமை இவருக்கு இருந்தாலும் நடிகை நயன்தாராவின் காதலராகவும், கணவராகவும் தான் இன்று வரை தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படுகிறார். மேலும் நயன்தாராவை வைத்து தான் இவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்கின்றன.
நானும் ரவுடிதான்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரே படம் என்றால் அது நானும் ரவுடிதான். இந்தப் படத்தில் இருந்து தான் நயன்தாராவுடன் காதலும் இவருக்கு ஆரம்பித்தது. நயன்தாரா இந்த கதைக்கு ஓகே சொல்லிய பிறகு அவர் மூலம் தான் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஹீரோ ஆனார். மேலும் நயன்தாராவுக்காக தான் நடிகர் தனுஷ் இந்த படத்தை தயாரித்தார்.
தானா சேர்ந்த கூட்டம்: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கலையரசன், கீர்த்தி சுரேஷ், ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். நயன்தாராவின் புகழை வைத்து தான் விக்னேஷ் சிவனால் சூர்யாவிடம் கதையே சொல்ல முடிந்தது. ஆனால் இந்த படம் சூர்யாவுக்கு தோல்வி படமாக அமைந்தது.
காத்து வாக்குல ரெண்டு காதல்: விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்திற்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நடிப்பதற்கு சமந்தாவிடம் பேசி ஒத்துக்கொள்ள வைத்ததே நடிகை நயன்தாரா தான் என்று இயக்குனர் விக்னேஷ் சிவனே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்திற்கு பிறகு அவரை எப்படியாவது பெரிய இயக்குனர் ஆக்கி விட வேண்டும் என்று நடிகை நயன்தாரா அஜித்திடம் பேசி தன்னுடைய கணவருக்காக சிபாரிசு செய்தார். ஆனால் நடிகர் அஜித்தோ இந்தப் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று விக்னேஷ் சிவனை ஒதுக்கி விட்டார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய கணவரான விக்னேஷ் சிவனை எப்படியாவது சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக ஆக்கிவிட வேண்டும் என்று தன்னால் முடிந்தவரை எல்லாம் செய்கிறார். ஆனால் விக்னேஷ் சிவனால் நயன்தாரா அளவுக்கு இன்று வரை ஜொலிக்க முடியவில்லை. இது நயன்தாராவுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.