Vijay : விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் சில வருடங்களாகவே வெளியாகி வருகிறது. இதற்கு காரணமாக பல விஷயங்கள் கூறப்படுகிறது. முதலாவதாக லியோ படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் திரிஷா நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் விஜய், திரிஷா பல ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் இவர்களைப் பற்றி கிசுகிசு வெளியானது. இதனால் த்ரிஷாவுடன் விஜய் நடிக்க கூடாது என்று சங்கீதா கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது. அதையும் மீறி லியோ படத்தில் திரிஷா நடித்ததால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் விஜய்யை விட்டு சங்கீதா பிரிந்ததாக ஒரு தரப்பு கூறுகின்றனர். மற்றொருபுறம் விஜய் அரசியல் வருவதில் சங்கீதாவுக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக புஸ்ஸி ஆனந்துடன் விஜய் பழகுவது பிடிக்கவில்லை அதனால் மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
திருமண நிகழ்ச்சியில் தனித்தனியாக பங்கு பெற்ற விஜய் மற்றும் சங்கீதா

ஆனால் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள். மகளின் படிப்புக்காக சங்கீதா லண்டன் சென்று இருக்கிறார் என்று விஜய் தரப்பினர் கூறியிருந்தனர். ஆனால் சமீபத்தில் சத்யபாமா கல்வி குழுமத்தின் நிறுவனர் ஜேப்பியார் பேத்தியின் திருமண வரவேற்பில் விஜய் கலந்து கொண்டார்.
அதோடு மட்டுமல்லாமல் சங்கீதாவும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கணவன், மனைவி இருவரும் ஒரே நிகழ்ச்சிக்கு வந்தாலும் தனித்தனியாக வந்திருப்பது தான் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. அப்படி என்றால் உண்மையிலேயே விஜய், சங்கீதா இருவரும் பிரிந்து தான் வாழ்கிறார்களா என்று விமர்சனங்கள் வந்துள்ளது.
வெறும் வாய்க்கு அவுல் போட்டது போல தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. விஜய் இப்போது அரசியலில் முழு நேரமாக இறங்கி உள்ள நிலையில் அவரது சொந்த வாழ்க்கையால் இந்த பிரச்சனை பூதாகரம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.