1. Home
  2. கோலிவுட்

வாரிசு மேடையில் அரசியல் பேசாத விஜய்.. சீமான், சவுக்கு சங்கரை வைத்து காய் நகர்த்திய எஸ் ஏ சி

வாரிசு மேடையில் அரசியல் பேசாத விஜய்.. சீமான், சவுக்கு சங்கரை வைத்து காய் நகர்த்திய எஸ் ஏ சி
விஜய் அரசியலைப் பற்றி வாரிசு மேடையில் பேசாததற்கு இதுதான் காரணம் என புட்டு புட்டு வைத்திருக்கிறார் அவருடைய தந்தை எஸ் ஏ சி.

பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. ஆனால் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்ற மேடையில் விஜய் அரசியல் பேசாததற்கு காரணம் இதுதான் என்று அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார். அதுமட்டுமின்றி சினிமாவில் இருந்து அரசியல்வாதிகளாக மாறிய சீமான், சவுக்கு சங்கரையும் வைத்து காய் நகர்த்தியுள்ளார் எஸ் ஏ சி. அத்துடன் தமிழகத்தில் விஜய்க்கு என்று எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருப்பதால் அவருடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் தாறுமாறாக ஓடும். ஆகையால் விஜய்க்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைப்பதால் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர், வாரிசை எப்படியாவது அரசியலில் நுழைத்து விட வேண்டும் என்று எவ்வளவோ பாடுபட்டார். ஆனால் தன்னுடைய அரசியலை குறித்த எந்த முடிவையும் தந்தை எஸ் ஏ சி எடுக்கக் கூடாது என விஜய் தெளிவாக சொல்லிவிட்டார். இதன் பிறகு தந்தை மகனுக்கு இடையே இப்போது சமூகமான உறவு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் எஸ் ஏ சி, தற்போது விஜய் எதனால் அரசியல் செல்ல தயங்குகிறார் என்பதை மேடையில் உரையாற்றிய போது புட்டு புட்டு வைத்திருக்கிறார். அதாவது சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட எஸ் ஏ சி சினிமா பிரபலங்கள் அரசியல் பற்றி பேசினால் வழக்கு பாயும், வருமான வரி சோதனை நடக்கும் என்பதை தெரிந்து தான் தன் மகன் விஜய் மேடையில் பேசவில்லை என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார். அரசியல் பேசினால், சமூகத்திற்காக பேசினால் கைது செய்யப்படுகின்றனர். அதையும் மீறி சீமான், சவுக்கு சங்கர் போன்றவர்கள் சாதித்து வருகின்றனர் என்பதை மேடையில் தெரிவித்துள்ளார். இவ்வாறு பகிரங்கமாக தன் மகனுக்கு இருக்கும் மிரட்டலை மேடையில் போட்டு உடைத்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.