மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்.. அட இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு

Thalapathy Vijay – Mysskin: இயக்குனர் மிஸ்கின் நல்லதொரு படைப்பாளியாக இருந்தாலும், வாய்க்கு வந்ததை எல்லாம் யோசிக்காமல் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் பேர்வழி. இவருடைய நல்ல படங்களுக்காக தான், இன்று வரை ரசிகர்கள் இவர் எவ்வளவு எகத்தாளமாக பேசினாலும் அதை கண்டு கொள்ளாமல் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

ஆரம்ப காலங்களில் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டு வந்த மிஸ்கின் தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்த பிறகு அப்படியே தன்னுடைய பேச்சை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டார். சரி இனி இவர் இப்படியே இருந்து விடுவார், தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு நடிகனும் கிடைத்துவிட்டார் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் மீண்டும் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். இந்த முறை இவர் பஞ்சாயத்தை கூட்டி இருப்பது விஜய் ரசிகர்களிடம். விஜய் ரசிகர்கள் சும்மாவே யாராவது கிடைத்தால் சமூக வலைத்தளத்தில் வச்சு செய்து விடுவார்கள். இவர் வாண்ட்டாக தலையை கொடுத்து தற்போது சிக்கி இருக்கிறார்.

மிஸ்கின் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்திருக்கிறார். எனவே படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படத்தில் நடித்தவர்கள் பிரிவியூ ஷோவில் படத்தை பார்ப்பது வழக்கம்தான். அதேபோல் மிஸ்கினும் லியோ படத்தை பார்த்து விட்டார். படத்திற்கான விமர்சனத்தை சொல்லுகிறேன் என்ற பெயரில் நடிகர் விஜய்யை ரொம்பவும் ஒருமையில் பேசி இருக்கிறார்.

இதனால் டென்ஷனான விஜய் ரசிகர்கள் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் அளவிற்கு சென்று இருக்கிறார்கள். மேலும் அந்த போஸ்டரில் தீதும் நன்றும் பிறர் தர வாரா எங்கள் தளபதியை உரிமையில் பேசிய அடிமுட்டாளே, மனநலம் குன்றியவனே, அறிவு கெட்டவனே, மன்னிப்பு கேள், எச்சரிக்கையுடன் இரு தளபதி வெறியர்கள் என்று பதிவிட்டிருந்ததோடு, இன்று அகால மரணம் அடைந்தார் என எழுதி இருக்கிறார்கள்.

எப்படி பார்த்தாலும் விஜய் மிஸ்கினை விட இரண்டு வயது குறைவானவர்தான். இருந்தாலும் சபை நாகரீகம் கருதி மிஸ்கின் மரியாதையுடன் பேசி இருக்கலாம். அவர் அப்படி பேசியதற்கு, விஜய் ரசிகர்கள் கொடுத்திருக்கும் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் முகம் சுளிக்கும் அளவிற்கு தான் இருக்கிறது. விஜய் பல மேடைகளில் இது பற்றி பேசியிருந்தாலும் அவருடைய ரசிகர்கள் இது போன்ற விஷயங்களை இன்று வரை மாற்றிக் கொள்ளாமல் தான் இருக்கிறார்கள்.