1. Home
  2. கோலிவுட்

படம் ஆரம்பிப்பதற்கு முன்பே வேலையை காட்டிய வெங்கட் பிரபு.. கொல காண்டான தளபதி பேன்ஸ்

படம் ஆரம்பிப்பதற்கு முன்பே வேலையை காட்டிய வெங்கட் பிரபு.. கொல காண்டான தளபதி பேன்ஸ்
தளபதி 68 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது.

Thalapathy 68: தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், ஒரு மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தின் வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு தளபதி 68 இயக்குனர் வெங்கட் பிரபு என்பது உறுதியான விஷயம்.

தளபதி 68 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குவது ஒரு பக்கம் மங்காத்தா அல்லது மாநாடு திரைப்படம் போல் விஜய்க்கு இது வெற்றி படமாக அமைந்துவிடும் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடினாலும், மறுபக்கம் வெங்கட் பிரபுவின் முந்தைய படங்கள் போல் இந்த படத்தை சொதப்பி விடுவாரோ என்ற பயமும் விஜய்யின் ரசிகர்களுக்கு இருக்கிறது.

இருந்தாலும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் அன்று தளபதி 68 பற்றி ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏற்கனவே வெங்கட் பிரபு விஜய்க்கு ஹிட் படம் கொடுப்பாரா அல்லது சொதப்பி விடுவாரா என பயந்து கொண்டு இருக்கும் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக வெங்கட் பிரபு ஒரு வேலை பார்த்து இருக்கிறார்.

நேற்று காலை வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சேரில் அவர் அமர்ந்திருப்பது போலவும் அவர் முன்னால் இருக்கும் மானிட்டர்களில் ஒரு பக்கத்தில் வெங்கட் பிரபு அரசியல் மற்றும் மற்றொரு மானிட்டரில் வெங்கட் பிரபு ரி யூனியன் என போடப்பட்டிருந்த புகைப்படத்தை பகிர்ந்து, நாளை காலை 11 மணிக்கு அப்டேட் வெளியாக போகிறது என பதிவிட்டிருந்தார்.

வெங்கட் பிரபு தளபதி 68 படம் எந்த மாதிரியான கதை அமைப்பைக் கொண்டிருக்கும் என அப்டேட் கொடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு விஜய் ரசிகர்கள் 11 மணிக்கு வெளியாக இருக்கும் அப்டேட்டுக்காக காத்துக் கிடந்தார்கள். ஆனால் வெங்கட் பிரபு ரொம்பவும் சாதாரணமாக அவருடைய நண்பர் இயக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருந்தார்.

ஒரு நாள் முழுக்க அப்டேட்டுக்காக காத்துக் கிடந்த விஜய் ரசிகர்கள் இந்த ட்வீட்டை பார்த்ததும் வெங்கட் பிரபு மீது செம காண்டில் இருக்கிறார்கள். பலர் அதை கமெண்ட்களில் தெரியப்படுத்த வெங்கட் பிரபு ரொம்பவும் கூலாக தளபதி 68 அப்டேட் வெயிட்டாக வரும், காத்திருங்கள் என்று பதிலளித்திருக்கிறார். வெங்கட் பிரபு இந்த அப்டேட்டை எதேர்ச்சியாக கொடுக்கவில்லை, படத்திற்கு இன்னும் ஹைப் ஏற்ற தான் அப்படி ஒரு புகைப்படத்தோடு நேற்று ட்வீட் செய்திருந்தார் என்பது மட்டும் தெரிகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.