1. Home
  2. கோலிவுட்

ஒரே ஒரு போன் தான், ஓடோடி வந்த விஜயகாந்த்.. பழசை மறந்த விஜய், குத்தி காட்டிய நடிகர்

ஒரே ஒரு போன் தான், ஓடோடி வந்த விஜயகாந்த்.. பழசை மறந்த விஜய், குத்தி காட்டிய நடிகர்
விஜயகாந்த் செய்ததை மறந்த விஜய்யை குத்தி காட்டிய பிரபலம்.

Vijay-Vijayakanth: விஜயகாந்த் ஒரு தங்க மனசுக்காரர் என்று திரையுலகில் யாரை கேட்டாலும் சொல்வார்கள். அதிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்காக அவர் என்ன வேணாலும் செய்வார். அப்படித்தான் அவர் விஜய்க்காகவும் ஒரு விஷயத்தை செய்தார். ஆனால் அவர் அதை மறந்து விட்டார் என ஒரு நடிகர் குத்தி காட்டி பேசி இருக்கிறார்.

விஜய் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனாலயே அப்படத்தை தயாரித்து இயக்கியிருந்த அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அந்த கடனை அடைப்பதற்கு கேப்டன் தான் உதவி இருக்கிறார்.

எப்படி என்றால் அந்த சமயத்தில் விஜய் உடன் இணைந்து ஒரு பெரிய ஹீரோ நடித்தால் நிச்சயம் படம் வெற்றியடையும் என்று எஸ் ஏ சந்திரசேகர் நினைத்திருக்கிறார். அதை தொடர்ந்து சத்யராஜ் உட்பட பல ஹீரோக்களிடம் அவர் கால்ஷூட் கேட்டிருக்கிறார். ஆனால் எல்லோரும் பிசியாக இருந்த நிலையில் கடைசியாக விஜயகாந்திடம் கேட்கலாம் என்று போன் போட்டு இருக்கிறார்.

அந்த சமயத்தில் முக்கியமான ஷூட்டிங்கில் இருந்தாலும் உடனே விஜய் வீட்டுக்கு அவர் ஓடோடி வந்திருக்கிறார். அதன் பிறகு அவர்களின் இக்கட்டான நிலையை தெரிந்து கொண்டு உடனே எத்தனை நாட்கள் தேதி வேண்டும் என்று ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அப்போது ஒரு ஆக்சன் ஹீரோவாக இருந்த அவர் விஜய்க்காக அப்படத்தில் தன் இமேஜை கூட விட்டுக் கொடுத்திருக்கிறார். எப்படி என்றால் அவரை உட்கார வைத்துவிட்டு விஜய் சண்டை போடும் காட்சி மற்றும் அவருக்கான சில மாஸ் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தது.

வேறு எந்த ஹீரோவும் நிச்சயம் இதை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் நட்பிற்காக மட்டுமே விஜயகாந்த் இதை செய்து கொடுத்தார். இப்படி தன்னை வளர்த்து விட்ட ஏணியை விஜய் மறந்துவிட்டார். கேப்டன் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் போது கூட அவர் பார்க்க வரவில்லை என நடிகர் மீசை ராஜேந்திரன் ஆவேசமாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். இது இப்போது சில விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.