காஷ்மீரில் திண்டாடும் விஜய்.. தளபதி 67க்கு போட்ட ஸ்கெட்ச் எல்லாம் கோவிந்தா!

வம்சி இயக்கத்தில் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடி வருகிறது வாரிசு. விமர்சன ரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வாரிசு படம் வெற்றி தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதை தொடர்ந்து தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதாவது விஜய் இல்லாத காட்சிகளை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விரைவில் விஜய் படப்பிடிப்பில் இணைவார் என்று போலிப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதே போல் லோகேஷின் விக்ரம் படமும் எதிர்பார்த்து அளவைவிட பெரிய வெற்றியை கொடுத்தது.

இதற்கு காரணம் முழுக்க முழுக்க லோகேஷன் ஸ்டைலில் எடுக்கப்பட்டது தான். இதே மாதிரி தளபதி 67 படத்தையும் விஜய் பாணியில் இல்லாமல் லோகேஷ் ஸ்டைலில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கும் விஜய் எந்தவித மாற்று கருத்து சொல்லாமல் லோகேஷ் இடமே ஒப்படைத்து விட்டார். இதனால் ரசிகர்களுக்கு இடையே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைகிறார்கள். மேலும் இந்த படத்தில் ஃபகத் பாசில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்களுடன் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கான சூட்டிங் முதல் பாகத்தை சென்னையில் ஆரம்பித்து விட்டார் லோகேஷ். மேலும் இதன் இரண்டாம் பாகத்தை காஷ்மீரில் ஏப்ரல், மே மாதத்தில் ஷூட்டிங் வைக்கலாம் என்று முடிவு செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று பிளான் மாற்றப்பட்டு இப்பொழுது இரண்டாம் கட்ட படபிடிப்பை காஷ்மீரில் சூட்டிங் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் அங்கே இப்பொழுது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், விஜய் குளிரால் சிரமப்பட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் பனிப்பொழிவினால் சூட்டிங் தடை பெற்று வருகிறது. இது 67 படத்தின் சூட்டிங்க்கு பெரிய தடையாக இருந்து வருவதாக படக்குழுவினர்கள் செய்வதறியாமல் இருந்து வருகிறார்கள். இதனால் படப்பிடிப்பு தாமதமாவது மட்டுமல்லாமல் விஜய்க்கு உடல் ரீதியாக சில பிரச்சினைகளும்  வந்துள்ளதாம்.