1. Home
  2. கோலிவுட்

லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்

லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்
லியோ படத்திற்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் லோகேஷ் ரொம்பவே தீர்க்கமாக இருக்கிறார்.

Actor Vijay and Director Lokesh: விஜய்யின் நடிப்பை லியோ படத்தில் பார்க்கலாம் என்பதை விட லோகேஷ் அப்படி இந்த படத்தில் என்னதான் கொண்டு வருகிறார் என்று பார்ப்பதற்கே அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் லோகேஷ் இப்படத்தை ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை எந்த ஒரு கதையையும் வெளியே லீக் ஆகாமல் பொக்கிஷமாக பார்த்துக் கொண்டே வருகிறார்.

அத்துடன் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அதற்கான வேலைகளை செய்யும்படி விஜய் சொல்லி இருக்கிறார். அதற்காக லோகேஷும் முழுமூச்சாக எல்லா விஷயத்திலும் இறங்கியுள்ளார். மேலும் லியோ படம் ஹிஸ்டரி ஆஃப் பைனான்ஸ் படத்தின் சாயலாக கொஞ்சம் இருக்கும்.

ஆனால் முழு கதையும் அப்படியே எடுக்காமல் லோகேஷ் ஸ்டைலில் பல மாற்றங்களை செய்து ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எடுத்து இருக்கிறார். அதாவது இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் முக்கியமான ஒரு சில காட்சிகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு மீதமுள்ள கதையை இவரே உருவாக்கி இருக்கிறார்.

இருந்தாலும் இப்படம் வெளிவந்த பிறகு வேறு எந்த பிரச்சினையிலும் மாட்டிட கூடாது என்பதற்காக இப்பவே முடிவு கட்ட வேண்டும் என்று விஜய் லோகேஷ் இடம் கண்டிஷனாக சொல்லி இருக்கிறார். அதற்காக லோகேஷ் இப்படத்திற்கு சம்பந்தமான எல்லா பேப்பர்களையும் தூசி தட்டி வருகிறார்.

இவர் பக்கத்தில் இருந்து லியோ படத்திற்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் லோகேஷ் ரொம்பவே தீர்க்கமாக இருக்கிறார். அத்துடன் இப்படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்பதால் பிரச்சினை ஏதும் வந்துவிட்டால் அது வேற மாதிரியான விமர்சனங்களை கொடுக்கும் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது.

அதனால் இப்பவே அதற்கான தீர்வுகளை சரி செய்து விடலாம் என்று விஜய் மற்றும் லோகேஷ் எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்கள். மேலும் இப்படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் வெளியிடுவதற்கு எல்லா வேலைகளும் தயாராகி வருகிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.