1. Home
  2. கோலிவுட்

ஒரே காரியத்தை சாதிக்க 3 முதல்வரை சந்தித்த தளபதி விஜய்.. அரசியலை மிஞ்சின சூழ்ச்சி

ஒரே காரியத்தை சாதிக்க 3 முதல்வரை சந்தித்த தளபதி விஜய்.. அரசியலை மிஞ்சின சூழ்ச்சி

விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எப்பொழுதுமே இவர் படம் வெளி வரப்போகுது என்றால் சில சர்ச்சைகளும் கூடவே சேர்ந்து வரும். இப்படி பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி தான் தமிழ் சினிமாவில் இன்று ஜெயித்து காட்டியிருக்கிறார். விஜய் படங்கள் எல்லாவற்றிற்கும் ரிலீஸ் பண்ணும் நேரத்தில் ஏதாவது அரசியல் ரீதியாகவோ, இல்லை அந்த படத்தின் ஏதாவது கருத்துக்களை சர்ச்சையாக சித்தரித்தோ, அரசியல் கட்சியினர் ஏதாவது தடை கற்களை போட்டு விஜய் படத்தை வெளியே விடாமல் பிரச்சனை செய்வார்கள். அப்படி விஜய் பல பிரச்சனைகளை சந்தித்துதான் அவர் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டியதாக உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அவர் அரசியல் பற்றி ஏதும் யோசித்து விடக்கூடாது என்று அவருக்கு தொடர்ந்து படங்கள் ரிலீஸ் செய்யும்போது டார்ச்சர் கொடுத்து வருகின்றனர். அப்படி பிரச்சனை செய்கையில் விஜய் மூன்றுமுறை முதலமைச்சர்களை சந்தித்துள்ளார். முதலாவதாக “தலைவா” படத்தின் ரிலீஸ் நேரத்தில் பிரச்சினை செய்ததால், அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார். அப்போதும் அவரை அலைக்கழித்தனர். இரண்டாவது முறையாக "மாஸ்டர்" படத்தின் ரிலீஸ் செய்யும் நேரத்தில் விஜய் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து முறையிட்டார். அந்த நேரத்திலும் அவருக்கு அரசியல் ரீதியான சில பிரச்சினைகளை கொடுத்து அவரை டார்ச்சர் செய்தனர். மூன்றாவது முறையாக இப்பொழுது  வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் “வாரிசு” இந்த படத்திற்கும் இப்பொழுது ஏதோ பிரச்சனையை கிளப்பி உள்ளார்கள் போல். இப்பொழுது விஜய் தெலுங்கானா சிஎம் வெங்கடேஸ்வரா ராவை சந்தித்து இருக்கிறார். வாரிசு படம் அங்கேயும் ரிலீஸ் ஆவதால் பிரச்சனை இல்லாமல் போவதற்கான சந்திப்புதான் இது.
Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.