விஜயகாந்த் போல் சுதாகரிக்க தெரியாமல் இமேஜை கெடுத்த விஜய் சேதுபதி.. தொடர்ந்து தேடி வரும் வாய்ப்பு

Actor Vijaykanth and Vijay Sethupathi: எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் விஜயகாந்தை நம்பி கொடுக்கலாம். எப்பொழுதுமே எந்த காரணத்திற்காகவும் வேலையே முடிக்காமல் விடமாட்டார். அதற்கு ஏற்ற மாதிரி கச்சிதமாக நடித்துக் கொடுத்து அனைவருக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுக்கக்கூடிய நடிகராகவும் மற்றும் மனிதாபிமானம் உள்ள மனிதராகவும் இருப்பவர் என்று பலரும் இவரை பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் நாம் காதுப்பட கேட்டிருப்போம்.

அப்படிப்பட்ட இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் அவஸ்தைப்படும் போது இவருக்கு முரட்டுக்காளை என்ற படத்தில் ரஜினிக்கு எதிரான வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்பொழுது இவருக்கு எல்லாமாகவும் இருந்து அனைத்தையும் பார்த்தவர் இவருடைய நண்பர் ராவுத்தர்.

அவர் விஜயகாந்த் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பார். வில்லன் கேரக்டருக்கு எவ்வளவு கோடி கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதன்பின் அந்த கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டவர் தான் ஜெய்சங்கர். இவர் இதற்கு முன்னதாக சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால் எப்பொழுது முரட்டுக்காளை படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தரோ அதை தொடர்ந்து இவரை தேடி வந்த வாய்ப்பு அனைத்தும் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர் தான்.

தற்போது இந்த நிலைமையில் தான் விஜய் சேதுபதி இருக்கிறார் என்றே சொல்லலாம். இவர் ஹீரோ என்ற இமேஜை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிய பின் தற்போது பெரிய நடிகர்களின் படத்தில் வில்லனாகவும், நண்பர்களுக்காக சில காட்சிகள் மற்றும் தெலுங்கு ஹிந்தியில் வில்லன் என்று இவர் இஷ்டப்படி எல்லாம் நடித்துக் கொடுத்துட்டு வருகிறார்.

இதனால் இவருடைய ஹீரோ இமேஜை கெடுத்துக் கொண்ட மாதிரி தற்போது இவரை தேடி வரும் வாய்ப்புகள் முக்கால்வாசி வில்லன் கேரக்டர் தான். அதனால் தற்போது மனதிற்குள் இவருக்கே ஒரு எண்ணம் வந்துவிட்டது ஏதோ தப்பு செய்கிறோமோ என்று. அதோடு மட்டுமல்லாமல் இவருடைய தோற்றத்தை பார்க்கும்போது வில்லனாக மட்டும் தான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு ஹீரோ என்ற லுக் இவரிடம் தென்படவில்லை.

இனி வரும் படங்களில் விஜயகாந்த் போல் சுதாகரித்துக் கொண்டு ஹீரோ வாய்ப்பைப் பெற்றால் இவரால் நினைத்து நிற்க முடியும். இல்லையென்றால் கூடிய சீக்கிரத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும். அப்படி இல்லை என்றால் வில்லன் லிஸ்டில் இவருடைய முத்திரை பதிந்துவிடும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →