1. Home
  2. கோலிவுட்

பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட விஜய் சேதுபதி.. டிஎஸ்பி படத்தால் வந்த பெரும் தலவலி

பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட விஜய் சேதுபதி.. டிஎஸ்பி படத்தால் வந்த பெரும் தலவலி

விஜய் சேதுபதி மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். தன்னை நாடிவரும் அனைத்து இயக்குனர்களுக்கும் கால்ஷீட் கொடுத்து அவரது படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் அவரது கதாபாத்திரம் முழுக்க முழுக்க வித்தியாசமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் இரண்டு, மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். கத்ரீனா கைப்புடன் விஜய் சேதுபதி நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்த சூழலில் சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டி எஸ் பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சேதுபதி படத்தை தொடர்ந்த விஜய் சேதுபதி இந்த படத்திலும் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனு, சிவானி, புகழ் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இமான் இசையில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டி எஸ் பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம் பெறவில்லை. ஆகையால் விஜய் சேதுபதி சன் பிக்சர்ஸை பகைத்துக் கொண்டார் என கூறப்பட்டது.

மேலும் அந்த போஸ்டரில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சன் பிக்சர்ஸ் நேரடியாக தயாரிக்கும் படத்தில் மட்டுமே தான் அதன் பெயர் இடம் பெறுமாம்.

ஆனால் டிஎஸ்பி படம் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிப்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய் சேதுபதி இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.