1. Home
  2. கோலிவுட்

ரஜினியின் வியாபாரத்தை ஆட்டம் காண வைத்த கேப்டனின் 3 படங்கள்.. பெரிய ஆளா இருப்பாரு போலயே!

ரஜினியின் வியாபாரத்தை ஆட்டம் காண வைத்த கேப்டனின் 3 படங்கள்.. பெரிய ஆளா இருப்பாரு போலயே!
ரஜினிகாந்தை ஆட்டம் காண வைத்த விஜயகாந்த்

Rajinikanth - Vijayakanth: சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் இருவரும் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக சமகாலத்து போட்டியாளர்களாக இருந்து வருகிறார்கள். 80லிருந்து 90களின் இறுதிவரை தமிழ் சினிமாவின் வியாபாரம் என்பது ரஜினி மற்றும் கமல் இருவரின் படங்களை வைத்துத்தான் நிர்ணயமானது. ஆனால் ரஜினியையே கேப்டன் வியாபாரத்தில் ஆட்டம் காண வைத்த சம்பவமும் நடந்திருக்கிறது.

ரஜினி மற்றும் கமல் உச்ச நடிகர்களாக இருக்கும் பொழுது சில முன்னணி நடிகர்கள் நல்ல செல்வாக்கோடு இருந்தார்கள். சத்யராஜ், பாக்கியராஜ், கார்த்திக், விஜயகாந்த் இந்த வரிசையில் இருந்த நடிகர்கள் தான். அதிலும் விஜயகாந்த்திற்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அப்போது அவருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் தான் இன்று வரை அவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது.

1988 ஆம் வருடம் தான் கேப்டன் மற்றும் சூப்பர் ஸ்டார் இடையே கடும் போட்டியான வருடமாக பார்க்கப்படுகிறது. அந்த வருடத்தில் ரஜினி நடித்து தர்மத்தின் தலைவன் மற்றும் ராஜாதி ராஜா என்ற படங்கள் ரிலீஸ் ஆகின. இரண்டு படத்திலும் ரஜினி இரட்டை வேடத்தில் தான் நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களின் வசனம் சேர்த்து 3.5 கோடி தான் வந்தது.

அதே வருடம் விஜயகாந்திற்கு செந்தூரப் பூவே, நல்லவன், பூந்தோட்ட காவல்காரன் என மூன்று படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகின. இந்த படத்தில் விஜயகாந்துடன் இணைந்து ராம்கி மற்றும் நிரோஷா நடித்திருந்தார்கள். பூந்தோட்ட காவல்காரன் படத்தில் 80களில் எவர்கிரீன் ஜோடியாக இருந்த விஜயகாந்த் மற்றும் ராதிகா இணைந்து நடித்திருந்தார்கள்.

எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் ராதிகா இணைந்து நடித்த வெளியான படம் தான் நல்லவன். ரஜினியின் இரண்டு படங்கள் 3 கோடியை வசூல் செய்த நிலையில் விஜயகாந்த் நடித்த நல்லவன் படம் மட்டுமே இரண்டு கோடி வசூல் செய்திருக்கிறது. ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ் பி முத்துராமனுக்கு இது ரொம்பவும் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது.

இன்றைய காலக்கட்டம் போல் அப்போது சோசியல் மீடியா எல்லாம் இருந்திருந்தால் இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும். விஜயகாந்த் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூட வசூலை வைத்து கணித்து சொல்லி இருப்பார்கள். அப்படிப்பட்ட வசதிகள் இல்லாததால் இது போன்ற விஷயங்கள் எல்லாம் வெளியில் தெரியாமல் போய்விட்டது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.