தளபதி விஜய்யுடன் சமீப காலமாக 27 வயது இளம் நடிகை ஒருவர் மிகவும் நெருக்கமான நட்பில் இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். சென்னையில் எந்த தேவையாக இருந்தாலும் விஜய் தான் செய்து கொடுக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வலம் வரும் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் படமாக்கப்பட்டது.
தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகளை தொடங்கலாம் என இருந்த நிலையில் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ரிலீஸ் செய்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்குமாம்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
அதிலிருந்தே விஜய்யுடன் ஒரு நல்ல நட்பை வளர்த்து வருகின்றாராம் மாளவிகா மோகனன். அடிக்கடி விஜய்யுடன் போன் பேசுவது, சென்னையில் ஏதாவது உதவி தேவை என்றால் சக நண்பர் போல உதவி கேட்பதும், அவர் செய்வதும் என இருவரது நட்பும் பலமாக இருக்கிறதாம்.

இதுகுறித்து மாளவிகா மோகன் சமீபத்தில் விஜய்யின் நடிப்பை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். விஜய் நட்புக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பவர் எனவும் அவரை தூக்கி வைத்து பேசியுள்ளார். இதை கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள், அடுத்த படத்திற்கு அடி போடுகிறார் என்கிறார்கள்.