தளபதி 67 ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜயின் வலது கை.. பூஜை நாட்களை டார்கெட் செய்து கல்லா கட்டும் லோகேஷ்

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படம் ரிலீஸுக்கு முன்பாக இருந்தே வாரிசு படத்தை காட்டிலும் விஜய் அடுத்தாக நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் வாரிசு ரிலீஸானாவுடன் இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாரிசு படத்தை பார்த்துவிட்டு திரையரங்கிலேயே , வாரிசு படத்தின் ரிலீசுக்காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன், இனிமேல் தளபதி 67 படத்தின் அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து படத்திற்கான பூஜை தேதி மாறி, மாறி வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ப்ரீ ரிலீஸ் வசூலாக 500 கோடிக்கும் மேலாக இப்படம் வசூலை ஈட்டியுள்ளது. திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள இப்படத்தில் மும்பையை சேர்ந்த கேங்ஸ்டாராக விஜய் நடிக்க உள்ளார். விக்ரம், கைதி உள்ளிட்ட படங்களின் தொடர் கதையாக இப்படம் உருவாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜயின் காம்போ இணைய உள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ், விஜயின் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் விஜயின் தோற்றம் எப்படி இருக்கும், அவரது கதாபாத்திரத்தின் பெயர் என்ன உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் உள்ள நிலையில், ஷூட்டிங்கை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் ரிலீஸ் தேதியை விஜயின் வலது கையாகவும், தளபதி மக்கள் இயக்கத்தில் பொதுச்செயலாளராகவும் உள்ள புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் விஜயின் படங்களை அப்லோடு செய்வது, விஜய் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்டங்களை வழங்குவது என விஜய்க்கு வலது கையாக இருந்து செயல்பட்டு வருபவர். அந்த வகையில் வரும் அக்டோபர் 19 தேதி தளபதி 67 ரிலீசாகும் என புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

ஒரு படத்தின் பூஜை கூட ஆரம்பிக்கப்படாமல் உள்ள நிலையில், எப்படி அப்படத்தின் ரிலீஸ் தேதியை இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியும் புஸ்ஸி ஆனந்தை பலரும் கேள்விக் கேட்டு வருகின்றனர். விஜயதசமி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் விடுமுறை நாட்களை முன்னிட்டு படம் அந்த தேதியில் ரிலீஸாகும் என்று கணிக்கப்படுவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.