ரஜினியுடன் சேர்ந்த விஜய் மகன் ஹீரோ.. கூட்டிக் கழிச்சு பார்த்தா எல்லாம் சரியா வரும்?

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படம் இயக்கவுள்ளார். அவரை லைகா நிறுவனம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. சில காரணங்களால் அது தள்ளிப் போனது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் ஆக்சன் படமாக உருவாகவுள்ளது. இதற்கான கதை, திரைக்கதை எல்லாம் ரெடி செய்துவிட்டார் ஜேசன்.

விரைவில் இப்பட ஷூட்டிங் தொடங்கவுள்ளது. ஹீரோயின், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

விஜய் மகனின் ஹீரோவை கூலியில் நடிக்க வைத்த ரஜினி?

லோகேஷ் கனகராஜ் – சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் கூலி. இதில், ஸ்ருதிஹாசன், நாகார்ஜூன், உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாஹிர் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இதில், புதிதாக சந்தீப் கிஷனும் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜின் முதல் பட ஹீரோ சந்தீப் கிஷன். சந்தீப் கிஷனின் திறமையை அறிந்து, அவர் ரஜினியிடம் கூறியிருப்பார்.

அதை ஏற்று, ரஜினியும் சந்தீப் கிஷனை தன் படத்தில் நடிக்க அனுமதி வழங்கி இருப்பார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விஜய்க்கும், ரஜினிக்கும் இடையே போட்டி, அரசியல் விவகாரம் என போய்க் கொண்டிருக்கிறது.

இப்போது, விஜய்யின் மகன் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தீப் கிஷனை தன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க வைத்தது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என பேசப்படுகிறது.

வளர்ந்து வரும் நடிகரான சந்தீப் கிஷன், ரஜினியுடன் கூலி படம், ஜேசன் சஞ்சயின் முதல் படம் என தொடர்ந்து பெரிய படமாக நடித்து வருகிறார். அவருக்கு இந்த ரெண்டு படங்களும் பெரிய பிரேக் கொடுக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment