மனைவிக்காக மனம் மாறிய விமல்.. பண மோசடி, கெட்ட பழக்கத்தால் வந்த வினை

எதார்த்தமான நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மினிமம் கேரண்ட்டி ஹீரோவாக வலம் வந்த இவரின் நடிப்பில் சமீப காலமாக எந்த படங்களும் வெளிவரவில்லை. கடைசியாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த டிஎஸ்பி திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடித்த விலங்கு என்ற வெப் தொடரும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை. ஏனென்றால் இவர் நடித்து முடித்த ஏழு படங்கள் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் கிடைக்கிறது. இப்படி பல சறுக்கல்களை சந்தித்த விமல் சமீபத்தில் உடல்நல குறைவாலும் பாதிக்கப்பட்டார். அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் தான் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் மன்னர் வகையறா படம் சம்பந்தமாக இவர் மீது பண மோசடி புகாரும் கொடுக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகளால் துவண்டு போன விமல் இன்னும் அதிகமாக குடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதுவே அவர் குடும்பத்தில் பெரும் பிரச்சனையாகவும் உருவெடுத்து இருக்கிறது.

அதன் காரணமாகவே அவருடைய மனைவி நான் ஒரு டாக்டராக இருந்தும் மதுவுக்கு அடிமையான உன்னை திருத்த முடியவில்லை. நீயும் சொல்வதை கேட்பதாக இல்லை. இனிமேல் உன்னுடன் வாழ்வது தேவையற்றது என சோசியல் மீடியாவில் ஒரு பதிவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் பயந்து போன விமல் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்போது தான் அவரின் மனைவி ஏகப்பட்ட கண்டிஷன்களை கூறி இதற்கு சம்மதித்தால் சேர்ந்து வாழலாம் என்று செக் வைத்திருக்கிறார். அதாவது குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் எந்த படத்தில் நடித்தாலும் அதைப்பற்றி எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சம்பளம் உள்ளிட்ட பண பரிமாற்றங்கள் தனக்கு தெரிய வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டு இருக்கிறார். இதைக் கேட்ட விமலும் மனைவி சொல்லே மந்திரம் என அதற்கு ஒப்புக்கொண்டு தற்போது முற்றிலும் மாறி இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு புது வாழ்க்கையையும் ஆரம்பித்து இருக்கிறார். மனைவியால் இனிமேல் அவர் வாழ்க்கையில் புது மாற்றங்கள் நிகழட்டும் என அவருடைய மாற்றத்தை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.