1. Home
  2. கோலிவுட்

சாவு பயத்தை காட்டிய ரோபோ சங்கர்.. பகிரங்கமாக மேடையில் போட்டு உடைத்த விமல்

சாவு பயத்தை காட்டிய ரோபோ சங்கர்.. பகிரங்கமாக மேடையில் போட்டு உடைத்த விமல்
விமலுக்கு சாவு பயத்தை காட்டிய ரோபோ சங்கர்.

Actor Vimal: ஒரு காலத்தில் மினிமம் பட்ஜெட் ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்த விமல் இடையில் எங்கிருக்கிறார் என்று தேடும் வகையில் காணாமல் போனார். அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுத்தது ஒரு காரணமாக இருந்தாலும் இவர் பல பிரச்சினையில் சிக்கியது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

அந்த வகையில் தற்போது அனைத்து பிரச்சினைகளையும் முடித்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் விமல் நடிப்பில் தற்போது துடிக்கும் கரங்கள் என்ற படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய விமல் ஒரு விஷயத்தை மேடையிலேயே பகிரங்கமாக போட்டு உடைத்தார்.

அதாவது விமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும், அதனால் அவருடைய உடல்நிலை பாதிப்படைந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைப்பற்றி கூறிய விமல் ரோபோ சங்கரின் உடல் நிலையை பார்த்து நான் உட்பட பலர் குடிப்பதையே நிறுத்திவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.

அந்த அளவுக்கு அவர் சாவு பயத்தை காட்டி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதாவது ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பாக கடுமையான உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இது குறித்து வெளிப்படையாக பேசிய ரோபோ சங்கர், குடிப்பழக்கத்தினால் தனக்கு எந்த அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிவித்திருந்தார்.

அந்த விஷயத்தை மேடையில் கூறிய விமல் நான் சரக்கடித்தே 45 நாட்கள் ஆகிவிட்டது. அந்த வகையில் ரோபோ மாமா தான் என்னை போன்ற பலர் மாறுவதற்கு காரணமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் இப்போது என்னுடைய மார்க்கெட் சரியில்லை அதனாலேயே இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு நான் யாரையும் கூப்பிடவில்லை.

ஒரு வேளை நான் கூப்பிட்டு அவர்கள் வர மறுத்தால் என்ன செய்வது என்ற தயக்கம் தான் அதற்கு காரணம். கடவுள் புண்ணியத்தில் இப்போது நான் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேல் என்னை திரையில் அதிகமாக பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.