மார்க் ஆண்டனி வெற்றியை முழுசா கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்.. சுற்றி அடிக்கும் ஏழரை நாட்டு சனி

Vishal: கல்யாண வயதை தாண்டியதனால என்னமோ விரக்தியில் ஏது பண்ணுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சுற்றித் திரிகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும் சேர்ந்து விட்டார். அதாவது ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வந்த விஷால் போகப் போக தோல்வி படங்களை சந்தித்து பல சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டார்.

அதிலிருந்து ஒரு வழியாக மீண்டு வந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து மறுபடியும் வெற்றியை ருசித்து விட்டார். அந்த வகையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இந்த ஒரு தருணத்திற்காக தான் போராடி வந்திருக்கிறார். ஆனாலும் இந்த வெற்றியை இவரால் முழுசாக அனுபவிக்க முடியாமல் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார்.

அதாவது மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் விஷால் அவருடைய அனுபவத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் சொல்ற விதம் வேண்டுமானால் மற்றவர்களுக்கு தவறாக தெரிந்திருக்கலாம். மற்றபடி விஷால் சொல்லிய விஷயங்கள் அனைத்தும் நல்லதுக்காகத்தான்.

அதாவது படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் தயவு செய்து யாரும் வெறும் 4 கோடியை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாவிற்குள் வந்து விடாதீர்கள். அந்த மாதிரி சிறிய படங்களை எந்த தயாரிப்பாளர்களும் வாங்க தயாராக இல்லை. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமே வாங்காமல் இருக்கிறார்கள்.

அதனால் உங்ககிட்ட அந்த மாதிரி பணம் ஏதும் இருந்தால் தயவு செய்து சொத்துக்களை வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். இவர் இந்த மாதிரி கூறியது சிறிய பட்ஜெட்டுகளை வைத்து படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை அவமானப்படுத்துவது போல் இருந்திருக்கிறது.

இதனால் அவர்கள் ரொம்பவே ஆவேசமாக விஷாலுக்கு தக்க பதிலடி கொடுத்து பேசி வருகிறார்கள். அத்துடன் நெட்டிசன்களும் இவரை கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே கோர்ட், கேஸ் என்று விஷால் அலைந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் புதிதாக இந்த ஒரு பிரச்சனை வேற ஏழரைக் கூட்டும் அளவிற்கு இவரை ஆட்டிப் படைக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய் - கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமா செய்திகளை ரசிகர்களுக்கு கொண்டு சென்று வருகிறார். Google News approved publisher, 1.3 மில்லியன் YouTube subscribers, 1.3 மில்லியன் Facebook subscribers,1.4 லட்சம் Instagram followers உடன் தமிழ் சினிமா உலகில் நம்பகமான தகவல் ஆதாரமாக விளங்கி வருகிறார்.

View all posts →