2ம் மனைவியின் கண்ட்ரோலில் இருக்கும் விஷ்ணு விஷால்.. ட்வீட் போட்டு அம்பலப்படுத்திய விஜய் ஆண்டனி
விஷ்ணு விஷால் தற்போது முழுக்க முழுக்க தன்னுடைய மனைவியின் கண்ட்ரோலில் தான் இருக்கிறார்.
விஷ்ணு விஷால் தற்போது மீண்டும் பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். எஃப் ஐ ஆர் திரைப்படத்திற்கு பிறகு சிறிது இடைவெளியில் அவருடைய கட்டா குஸ்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முழுக்க முழுக்க காமெடி அலப்பறைகளுடன் இருக்கும் அந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் பெண்களுக்கான ஒரு திரைப்படமாகும். அந்த வகையில் ஐஸ்வர்யா லட்சுமியின் கதாபாத்திரம் தான் ஹீரோவாக முழு படத்தையும் தாங்கி நிற்கிறது. அதற்கு அடுத்த நிலையில் தான் விஷ்ணு விஷால் இருக்கிறார். இருந்தாலும் ஹீரோயினுக்கு பெருந்தன்மையாக இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கும் விஷ்ணு விஷாலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படத்தில் நான் ஸ்டாப்பாக காமெடியில் கலக்கி இருக்கும் அவருடைய நடிப்பும் ஆடியன்ஸை கவர்ந்துள்ளது. இதனாலேயே தற்போது இந்த திரைப்படம் வசூலில் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்தை பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் தான் ஒரு உள்குத்து இருக்கிறது. அதாவது அவர் இப்படத்தை கட்டா குஸ்தி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக குட்டா என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதில் என்ன உள்குத்து இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அதாவது விஷ்ணு விஷாலின் இரண்டாம் மனைவியின் பெயர் தான் ஜுவாலா குட்டா. ஏற்கனவே இவர் கடந்த 2010ம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் விஷ்ணு விஷால் தன் மனைவியை கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின் அவர் 2021 ஆம் ஆண்டு ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து அவர் தன்னுடைய இரண்டாம் மனைவியின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறாராம். பட விஷயங்களில் கூட அவர்தான் முடிவெடுப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வளவு ஏன் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த அவருடைய ஒரு போட்டோவை கூட ஜுவாலா கட்டா தான் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் விஷ்ணு விஷால் தற்போது முழுக்க முழுக்க தன்னுடைய மனைவியின் கண்ட்ரோலில் தான் இருக்கிறார். அதேபோன்றுதான் கட்டா குஸ்தி திரைப்படத்தில் அவருடைய கேரக்டரும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அவர் நிஜ கேரக்டரிலேயே அந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதைத்தான் விஜய் ஆண்டனி ட்வீட் போட்டு அம்பலப்படுத்தி இருக்கிறார்.
