இவன் கூட குடித்தனம் நடத்த முடியாது. திரும்பி வந்துடாத தாயே.. சுயரூபத்தை காட்டிய விசித்ரா, விடாமல் தொடரும் பனிப்போர்

Biggboss 7: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆளாளுக்கு ஒருவரை டார்கெட் செய்து வன்மத்தை கொட்டி வருகின்றனர். இதில் மாயா மாஃபியா செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. அதேபோல் விசித்ராவும் ஒருவர் மீது தன் வன்மத்தை எல்லை மீறி காட்டிக் கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் அவருடைய சுயரூபமும் வெளிவந்துள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து தினேஷ், விசித்ரா இருவருக்கும் நடக்கும் பனிப்போர் நாம் அறிந்தது தான். அதில் இருவருக்கும் முன் ஜென்ம பகை இருக்குமோ என்னும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அதில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் விசித்ரா பாத்திரம் கழுவிக் கொண்டே தினேஷை கண்டபடி திட்டிக் கொண்டிருக்கிறார். சில மூஞ்சிய பார்த்தாலே புடிக்கல. இவங்க எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம். வாழ்ந்து என்ன பிரயோஜனம்.

அதிலும் ரட்சிதாவை மனதில் வைத்து இவர் கூட எல்லாம் குடித்தனம் நடத்த முடியாது. அதுக்கு தனியாவே இருந்திடலாம். ஒழுங்கா உன்னோட வாழ்க்கையை நடத்து. தயவு செய்து திரும்பி வந்திராத தாயே. உன் வாழ்க்கையை பாரு என சொல்கிறார்.

இதிலிருந்து அவருக்கு தினேஷ் மீது எந்த அளவிற்கு வன்மம் இருக்கிறது என வெளிப்படையாக தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் விசித்ராவின் சுயரூபம் என கூறி வருகின்றனர். ஆக மொத்தம் தெய்வத் தாயின் உண்மை நிறம் இதன் மூலம் வெளிவந்துள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →