1. Home
  2. கோலிவுட்

என்னது எனக்கும் மேனனுக்கும் கல்யாணமா.? பதறிப்போய் வதந்திக்கு பதிலடி கொடுத்த விஷால்

என்னது எனக்கும் மேனனுக்கும் கல்யாணமா.? பதறிப்போய் வதந்திக்கு பதிலடி கொடுத்த விஷால்
விஷால் திருமணம் குறித்து வந்த வதந்திகள் அனைத்துக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Actor Vishal Marriage Issue: விஷாலை பொருத்தவரை அவருடைய படங்களில் இருந்து சர்ச்சைகள் வருகிறதோ இல்லையோ, இவருடைய திருமண வாழ்க்கை குறித்து அடிக்கடி ஏதாவது பிரச்சனை கிளம்பி கொண்டே வருகிறது. அந்த வகையில் வரலட்சுமி சரத்குமார் உடன் நெருங்கி பழகுவதாகவும், இவரைத்தான் விஷால் திருமணம் செய்யப் போகிறார் என்ற விஷயங்கள் நாளா பக்கமும் பரவியது.

ஆனால் அதற்கு விஷால் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் அவ்வளவு தான் எங்களுக்குள் இருக்கும் உறவுமுறை என்று தெளிவாக கூறிவிட்டார். அதன் பின் சில வருடங்களுக்கு முன் அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார். இவர்களுடைய பந்தம் நிச்சயதார்த்தம் வரை போனது.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு போகாமல் பாதியிலேயே முறிந்து விட்டது.

இப்படி தொடர்ந்து விஷால் உடைய திருமண வாழ்க்கை பலபேர் பேசும் பொருளாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 46 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தையை பெற்றெடுத்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் விஷாலுக்கு என்னமோ திருமணம் என்றாலே கனவாக போகும் அளவிற்கு எட்டாத தூரத்திற்கு சென்று விட்டது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் லட்சுமிமேனன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த விஷயம் நம்பும் படியாக தான் அனைவரும் பார்க்கப்பட்டு வந்தார்கள். காரணம் விஷால் மற்றும் லட்சுமிமேனன் சேர்ந்து ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதனால் இவர்கள் காதலித்திருக்கலாம் என்றும், லட்சுமிமேனனுக்கு தற்போது பட வாய்ப்புகள் அமையாது தான் விஷாலை திருமணம் செய்யப் போவதாக அனைவரும் நம்பும்படியாக அமைந்துவிட்டது.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது விஷால் சமூக வலைதளத்தில் இவருடைய பதிலை அளித்திருக்கிறார். அதாவது பொதுவாக என்னைய பற்றி ஏதாவது வதந்திகள் வந்தால் நான் அதை நினைத்து கவலைப்பட மாட்டேன். ஆனால் இது  நடிகை என்பதையும் தாண்டி ஒரு பொண்ணோட வாழ்க்கை என்பதை மறந்து விட்டு இமேஜை கெடுக்கும் படியான எந்த ஒரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம். எனக்கான நேரம் காலம் கூடி வரும் போது என்னுடைய திருமணம் நடக்கும் என்று சொல்லி வதந்திகள் அனைத்துக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.