2026-ல CM விஜய்.. இதுக்காகத்தான் வைச்சேன், யாதும் அறியான் டீம் சொன்ன ஸ்வாரஸ்யமான விஷயம்

Vijay : அதாவது நடிகர் விஜய் திரையுலகத்திலிருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த மாற்றம் விஜய் ரசிகர்களை பாதிக்கும் என பார்த்தால், விஜய்க்கு ரசிகன் என்பதை விட தொண்டன் என்பதே பெருமை என்கிற வகையில் ரசிகர்கள் ஆதரவு தெரிகின்றனர்.

நடிகர் விஜய்யாக பிடிக்காதவர்களுக்கு கூட அரசியல்வாதி விஜய்யை மிகவும் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் ரியாலிட்டி வாழ்க்கையில் விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் தற்போது வெளிவரவிருக்கும் “யாதும் அறியான்” படக்குழு ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனையான படங்களை வரவேற்கிறார்கள் மக்கள். ஆனால் இந்த விஷயம் மிகவும் எதிர்பாராத ஒன்று.

யாதும் அறியான் படத்தில் ஒரு காட்சியில் ஒரு கடையில் தொங்கி கொண்டிருக்கும் செய்தி தாள்களில் முதலமைச்சர் விஜய் என்று குறிப்பிட்டிருக்கும் செய்தித்தாள் கடைகளில் தொங்கி கொண்டிருக்கும் மாதிரியான காட்சிகள் இடம்பெறுகின்றன.

யாதும் அறியான் டீம் சொன்ன ஸ்வாரஸ்யமான விஷயம்..

இந்த செய்திதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது, அதற்காக “யாதும் அறியான்” பட இயக்குனர் தற்போது அளித்த நேர்காணல் ஒன்றில், நான் விஜய் ரசிகன், நான் யாரும் எதிர்க்கும் வகையில் இதை செய்யவில்லை. தவறான நோக்கத்தோடு பயன்படுத்தவில்லை.

என் சொந்த விருப்பத்தின் பேரில் வைத்துள்ளேன் சுயநலமாகவும் சிந்திக்கவில்லை. 2026-ல் எந்த மேட்டர் வேணும்னாலும் வைத்திருக்கலாம் ஆனால் நான் விஜய் ரசிகன், அவர் என் மோட்டிவேஷன் அதனால் மனதிருப்தியாக வைத்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.இந்த காட்சி அனைவரும் ரசிக்கும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.