புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ராயன் வெற்றியால் தனுஷ் எடுத்த முடிவு.. பெத்த லாபம் பார்க்க போகும் பெரும் முதலை

Dhanush: தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராயன் படம் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த சூழலில் இப்போது அடுத்ததாக தனுஷ் மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதுதவிர ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதுவும் இந்தப் படத்தை போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குவதாக கூறப்பட்டது. இந்த சூழலில் இதில் எதிர்பாராத ட்விஸ்ட் உள்ளது.

இப்போது இந்த படத்தையும் தனுஷ் தான் இயக்க உள்ளாராம். ராயன் படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் தந்த நிலையில் வேல்ஸ் நிறுவனம் தனுஷை வைத்தே இந்த படத்தை எடுக்கலாம் என்ற திட்டத்தில் உள்ளனராம். தனுஷும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம்

சில காலமாகவே தனுஷ் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்தார். கேப்டன் மில்லர் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதைத்தொடர்ந்து ராயன் படம் தான் ஒரு நல்ல திருப்பத்தை தனுஷுக்கு கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

மற்றொருபுறம் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அப்படி ரிலீஸ் ஆகும் ஒரு சில படங்களும் எதிர்பார்த்த அளவு ஓடாமல் நஷ்டத்தை கொடுத்துள்ளது. இதனால் இப்போது தனுஷை லாக் செய்து வைத்துள்ளனர்.

சின்ன தூண்டிலை போட்டு பெரிய லாபம் பார்க்கலாம் என்பதற்காக தனுஷ் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படம் உருவாகுவது தற்போது உறுதியாக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

ராயன் வெற்றியால் கம்பேக் கொடுத்த தனுஷ்

Trending News