வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

படம் ஓடலைன்னாலும் மாஸ் காட்டும் சந்தானம்.. நயன்தாராவை அடுத்து போயஸ் கார்டனில் பல கோடியில் வீடு

சந்தானம் காமெடி நடிகராக இருந்தவரையிலும் கையில் எக்கச்சக்க படங்கள் இருந்தது. ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து தற்போது கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே சரிவர போகவில்லை.

இந்த வகையில் குலுகுலு படம் படுமோசமான தோல்வியை சந்தித்த நிலையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் படம் தோல்வி அடைந்தது. காமெடியை கைவிட்டு விட்டு முழு ஹீரோவாக மாற நினைத்ததின் விளைவு தான் இது. ஆக்சன் படங்கள் சுத்தமாக அவருக்கு கை கொடுக்கவில்லை.

Also Read : சந்தானம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 5 நடிகர்கள்.. லொள்ளு சபாவில் இருந்து தொடரும் நட்பு

ஆனால் இவ்வாறு தொடர்ந்து சந்தானத்தின் படங்கள் தோல்வியை தழுவி வந்தாலும் மாஸ் காட்டி வருகிறார். அதாவது சினிமா மற்றும் அரசியலில் உள்ள முக்கிய பிரபலங்கள் வசிக்கும் இடம் போயஸ் கார்டன். ரஜினி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரை பல பிரபலங்களின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது.

இங்கு வீடு வாங்குவது மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக இங்கு வீடு வாங்க பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டு கோடிகளை கொட்டி கொடுத்து வீடு வாங்கி உள்ளனர். அந்த வகையில் தனுஷ், ஜெயம் ரவி போன்ற பிரபலங்களும் அங்கு வீடு வாங்கி உள்ளனர்.

Also Read : அடுத்தடுத்த தோல்வியால் சிக்கி தவிக்கும் சந்தானம்.. ஏஜென்ட் கண்ணாயிரம் இதில இருந்து தப்புமா?

அதுமட்டுமின்றி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 2 பிளாட் வாங்கி உள்ளார். இப்படி முன்னணி பிரபலங்கள் அங்கு வீடு வந்த நிலையில் சந்தானமும் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளாராம். அந்த புதிய வீட்டின் விலை கிட்டத்தட்ட 22 கோடி இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதை அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்போது சந்தானத்திற்கு மார்க்கெட் இல்லை என்றாலும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி இப்போதே சொத்துக்களை குவித்து வருகிறார் என்று பேசப்படுகிறது. எப்படியும் சந்தானத்திற்கு லாபம் வந்தாலும் தயாரிப்பாளர்கள் தான் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

Also Read : சமீபத்தில் சந்தானம் ரசிகர்களை நோகடித்த 5 படங்கள்.. தியேட்டரில் தலைதெறிக்க ஓட வைத்த குலுகுலு

Trending News