3 விதமான டக் அவுட்.. இதுவரை யாரும் செய்யாத பெரிய சாதனையை படைத்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் 2021 ஆம் ஆண்டின் 14வது போட்டி நேற்று நடைபெற்றது. இதுவரை ஒரு போட்டியில் கூடவெல்லாத ஹைதராபாத் அணி எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கியது.

பஞ்சாப் அணி டாஸில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்து தனது அசத்தலான பந்து வீச்சால் ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை திணற அடித்தது. மயங்க் அகர்வால், சாருக் கான் இருவரும் ஓரளவு தாக்குப்பிடித்து தலா 22 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் அணி 19.4 ஓவர் முடிவில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அஹமது 4 ஓவர்கள் வீசி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பின் 120 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டியது.

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் அதிரடியாக ஆடினார்கள். 18.4 ஓவர்களில் வெற்றிக்குத் தேவையான 120 ரன்களை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து எளிதாக எடுத்து வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி.

இந்த போட்டியில் நடந்த சுவாரசியம் என்னவென்றால் பஞ்சாப் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன், டைமண்ட் டக் ஆனார். அவர் இதற்கு முன்னர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கோல்டன் டக்கும், சிஎஸ்கே அணிக்கெதிராக சில்வர் டக்கும் ஆகியுள்ளார்.

அதாவது ஒரு பந்தை கூட பிடிக்காமல் அவுட்டாகியதும், முதல் பந்தில் அவுட்டாகியதும், இரண்டாம் பந்தில் அவுட்டாகியதும், டைமன் டக் கோல்டன் டக், சில்வர் டக் ,என கிரிக்கெட்டில் கூறுவார்கள்.

Nicholas-pooran-Cinemapettai.jpg
Nicholas-pooran-Cinemapettai.jpg

நிக்கோலஸ் பூரானின் இந்த சாதனையை எந்த ஒரு ஐபிஎல் போட்டிகளிலும், எந்த ஒரு வீரரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner