ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குஷ்பு, நயன்தாராவுக்கு பிறகு நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

வெறும் இரண்டே படங்களில் நடித்த பிரபல இளம் நடிகைக்கு கோவில் கட்டியுள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அந்த இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றது.

தெலுங்கு சினிமாவில் இருந்து தற்போது தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் நிதி அகர்வால் இளம் நடிகர்களின் ஆதரவை பெற்று தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் பொங்கல் அன்று சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும், ஜெயம் ரவி நடித்த பூமி படமும் ஒரே நாளில் வெளியானது.

இந்த இரண்டு படங்களிலும் நாயகியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். படம் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நிதி அகர்வாலின் சின்ன சின்ன சேட்டைகள் படத்தில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது போல.

nidhi-agarwal-cinemapettai02
nidhi-agarwal-cinemapettai

இந்நிலையில் சென்னையில் உள்ள ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன. இதற்கு முன்னதாக குஷ்பு மற்றும் நயன்தாராவுக்கு தான் ரசிகர்கள் கோவில் கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

nidhi-agarwal-cinemapettai01
nidhi-agarwal-cinemapettai01

அவர்கள் இருவருக்குமே பல படங்கள் நடித்த பிறகுதான் ரசிகர்களின் ஆதரவை பெற்று கோவில் கட்டும் அளவுக்கு வளர்ந்தனர். ஆனால் சுமாரான இரண்டு படங்களில் நடித்துவிட்டு இவருக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது என பல நடிகைகளை சிந்திக்க வைத்துள்ளது.

nayanthara-temple
nayanthara-temple

நிதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இன்னும் சில இளம் நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Trending News