புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கிரிக்கெட் வீரர்களின் பட்டப் பெயர்களும், பெயர் காரணங்களும்.. நமக்கு தெரிந்ததெல்லாம் சபாஷ் சபாஷ் ஷக்கி

பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்களின் புனைப்பெயர்கள் விக்கெட் கீப்பர் யிடமிருந்து தான் தெரியவரும். ஸ்டம்ப் மைக் மூலம் அவர் மைதானத்தில் உரையாடுவதும், பவுலர்களை அழைப்பதும் அதில் எதிரொலித்து வெளியில் தெரியவரும். எல்லா வீரர்களையும் சில எளிமையான முறையிலும், துணை பெயர்களை வைத்தும் ஸ்டம்ப் பின்புறமிருந்து அழைப்பார். அப்படி தெரியவந்த வீரர்களின் பட்ட பெயர்கள்.

கப்பார்: இது இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவானின் பட்டப்பெயர். மீசையை முறுக்கிக் கொண்டும், தொடையைத் தட்டிக் கொண்டும் விளையாடும் வீரர் இவர். அதனாலேயே இவரை கப்பார் என்று அழைக்கிறார்களோ என்னமோ!

Dhawan-Cinemapettai.jpg
Dhawan-Cinemapettai.jpg

சர் ஜடேஜா, ஜட்டு: ஜட்டு என்ற பெயர் ஜடேஜா என்பதின் குறுகிய வடிவம். ஆனால் சர் ஜடேஜா என்பது மகேந்திர சிங் தோனி ஒருமுறை ட்விட்டரில், இந்தப் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதனால் அவர் இப்பெயர் பெற்றார்.

யுனிவர்சல் பாஸ்: 40 வயது நிரம்பிய கிறிஸ் கெய்லின் துணை பெயர் இது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அவர் விளையாடும் மட்டையில் யுனிவர்சல் பாஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருப்பார். அது மட்டுமின்றி எல்லா நாட்டிற்கு எதிராகவும் அதிரடியாக விளையாடுவதால் இந்த பெயர் பெற்றார் என்று கூறப்படுகிறது.

விசார்ட்: இங்கிலாந்து அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டர். இவர் ஒவ்வொரு முறையும் பந்துவீசியவுடனும், அடித்தவுடனும் மூக்கை சுரண்டுவார். அதனால் இவருக்கு விசார்ட் என்று பெயர் வைத்துள்ளனர்.

Woakes-Cinemapettai.jpg
Woakes-Cinemapettai.jpg

தி வால்: இந்த பெயர் அனைவரும் அறிந்ததே இந்திய அணியின் ராகுல் டிராவிட்டின் துணை பெயர். இவர் டெஸ்ட் போட்டிகளில் நின்று, நிலைத்து ஆடுவதால் இவரை” தி வால்” என்று அழைக்கின்றனர்.

மிஸ்டர் 360: இது சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஏபி டிவில்லியர்ஸ் பெயர். அனைத்து திசைகளிலும் பந்தை அடித்து நொறுக்குவதால் இவரை “மிஸ்டர் 360” என்று செல்லமாக அழைக்கின்றனர்.

Devilliers-Cinemapettai.jpg
Devilliers-Cinemapettai.jpg

மிஸ்டர் ஐபிஎல்: ஐபிஎல் போட்டிகள் என்றாலே சுரேஷ்ரெய்னா அசத்தி விடுவார். இந்த வகை போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால் இவர் “மிஸ்டர் ஐபிஎல்” என பெயர் எடுத்தார். இவரை சின்ன தல என்றும் செல்லமாக அழைப்பார்கள்.

மிஸ்டர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய மைக்கேல் ஹசி இன் செல்ல பெயராகும். இவர் ரொம்ப டீசன்டாக விளையாடுவதால் இவருக்கு இந்த பெயரை கொடுத்துள்ளனர். இவர் அவுட் என்று தெரிந்தால் உடனே வெளியே சென்று விடுவார். அதனாலேயே இவரை இந்த பெயரை வைத்து அழைக்கின்றனர்.

Mike-Hussey-Cinemapettai.jpg
Mike-Hussey-Cinemapettai.jpg

கிங் கோலி: இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி. இவர் இரண்டாவது இன்னிங்சில் எதிரணி வீரர்களின் டார்கெட்டை விரட்டி பிடிப்பதில் வல்லவர். இதனால் இவரை “சேஷிங் கிங்” என்று கூறிக் கொண்டிருந்தனர். அதன்பின்னர் கிங் கோலி என்று அழைக்கின்றனர்.

ஹிட்மேன்: ரோஹித் சர்மாவின் செல்லப்பெயர் இது. ஓபனிங் இறங்கி அடித்து விளையாடுவதால் இவருக்கு இந்த பெயரை கொடுத்தனர்.

பிக் ஷோ: அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் பெயர் இது. ஆட்டத்தை எதிரணியிடமிருந்து தன் பக்கம் மாற்றக்கூடிய வீரர். இவர் ஆட்டத்தை காணவே ஆஸ்திரேலியா நாட்டில் ரசிகர்கள் பட்டாளம் அலைமோதும். இதனால் இவர் பிக் ஷோ என்று பெயர் பெற்றார்.

Maxwll-Cinemapettai.jpg
Maxwll-Cinemapettai.jpg

Trending News