அய்யனார் துணை சீரியலில் சோழனுக்காக ரிசப்ஷனுக்கு வரும் நிலா.. மருமகளால் சொர்க்கமாக மாறப்போகும் சேரன் வீடு

ayyanar thunai
ayyanar thunai

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரன் நிலாவை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த சந்தோஷத்தில் சோழன் இவர்கள் இருவருக்கும் ரிசப்ஷனை வைக்கலாம் என்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். அத்துடன் ஊர் மக்கள், சொல்லும் அவப்பெயரையும் மாற்றி எங்களுக்கும் கல்யாணம் நடக்கும் வீட்டில் பெண்கள் வந்து வாழ்வாங்க என்பதை காட்ட வேண்டும் என்று சோழன் ஆசையுடன் ரிசப்ஷன் வேலைகளை பார்த்தார்.

ஆனால் நிலாவை பொருத்தவரை தன் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக தான் சேரன் நமக்கு உதவி செய்திருக்கிறார். மத்தபடி இந்த கல்யாணம் சும்மா பொம்மை கல்யாணம் தான் என்று நினைத்து சேரன் கூப்பிடுதும் சோழன் வீட்டில் வந்து தங்கி இருக்கிறார். அதனால் இந்த ரிசப்ஷனில் விருப்பமில்லாமல் இருக்கும் நிலா, சேரனிடம் ரிசப்ஷனை நிறுத்த சொல்லி கெஞ்சுகிறார்.

அப்பொழுது சோழன், தன்னுடைய வீட்டுக்கு ஊர் மக்கள் கொடுத்த பட்டத்தை நீ வந்த பிறகு தான் மாற்ற வேண்டும். அத்துடன் உனக்கும் உன் வாழ்க்கைக்கும் நாங்கள் எல்லோரும் துணையாக இருப்போம் என்பதை காட்டும் வகையில் தான் இந்த ரிசப்சனை நான் ஏற்பாடு பண்ணி இருக்கிறேன் என்று சொல்கிறார்.

உடனே நிலா, எனக்காக யோசித்து பண்ண கூடிய உங்களை எனக்கு மறுபடியும் ஏமாற்ற விருப்பமில்லை. எனக்கும் உங்க தம்பிக்கும் நடந்தது பொம்ம கல்யாணம் தான். கட்டாயத்தின் பெயரில் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொண்டோம். மற்றபடி இவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி நடந்த உண்மைகளை எல்லாம் சோழனிடம் சொல்லிவிடுகிறார்.

எல்லா உண்மையும் தெரிந்து கொண்ட சோழன் எதுவும் பேச முடியாமல் நிலாவிடம் மன்னிப்பு கேட்டு குடும்ப சூழ்நிலையும் எடுத்துச் சொல்லி பீல் பண்ணுகிறார். பிறகு சேரன் சோழன் இருவரும் சேர்ந்து வெளிய காத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் இந்த ரிசப்ஷன் நடக்காது என்று சொல்லிட்டு வரலாம் என வெளியே வந்து விடுகிறார்கள்.

அப்பொழுது சேரன் ஒதுங்கிய நிலையில் சோழன் மணமேடையில் ஏறி நிற்கிறார். உடனே ஊர் மக்கள் எங்கே பொண்ணு என்று கேட்டு நக்கல் அடித்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு பக்கம் பொண்ணு காணவில்லையா ஓடிப் போய்விட்டதா என்று ஏளனமாக பேசி சிரிக்கிறார்கள். உடனே சோழன் வரவேற்பு நடக்காது என்று சொல்ல வரும் பொழுது நிலா மணப்பெண்ணாக கிளம்பி வந்துவிடுகிறார்.

நிலாவைப் பார்த்ததும் சோழன் எதுவும் பேசாமல் நின்ற நிலையில் நிலா இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம். நீங்கள் ஏற்பாடு பண்ண வரவேற்பு நல்லபடியாக முடிக்க வேண்டும். அதனால் நான் கிளம்பி வந்து இருக்கிறேன் என்று சொல்லி சோழன் ஏற்பாடு பண்ணிய வரவேற்பை நல்லபடியாக நிலா முடித்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து இந்த உண்மையை தெரிந்து கொண்ட சோழன், அடுத்து நிலா வெளியே தங்குவதற்கு ஏற்பாடு பண்ணுவார். அப்பொழுது நிலா நான் இங்கே தங்கிக் கொள்கிறேன், இங்கு இருந்தே வேலைக்கு போகிறேன் என்று சொல்லி வீட்டோடையே இருக்கப் போகிறார். அந்த வகையில் அந்த வீட்டில் இருந்து கொண்டு நிலா ஆசைப்பட்ட மாதிரி வேலைக்கு போயிட்டு அந்த குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு சொர்க்கமாக மாற்றப் போகிறார்.

Advertisement Amazon Prime Banner