தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் நினைத்தேன் வந்தாய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேவயானி மற்றும் ரம்பா என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.
இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் உருவாகி இருந்த நினைத்தேன் வந்தாய் படம் குறித்து தற்போது சில சுவாரசியமான செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இடம் பெற்றிருந்த வண்ண நிலவே பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும்.
இப்பாடலில் நடிகை ரம்பா இருப்பதுபோல் காட்சிப்படுத்தி இருப்பார்கள் ஆனால் உண்மையில் அது ரம்பா கிடையாதாம். இப்பாடல் படமாக்கப்பட்ட போது ரம்பா நடிகர் சிரஞ்சீவி உடன் தெலுங்கு படத்தில் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
எனவே இயக்குனர் செல்வபாரதி ரம்பாவை போல உடலமைப்பு கொண்ட வேறொரு நடிகையை வைத்து பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார். இதனால் தான் பாடலின் பல இடங்களில் ரம்பாவின் முகத்தை காட்டாமல் காட்சிகள் அமைத்திருப்பார்கள்.
அதேபோல் இப்படத்தில் ரம்பாவின் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன் தானாம். ஆனால், சிம்ரன் வெவ்வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
![simran-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/simran-cinemapettai.jpg)
முன்னதாக இப்படத்தில் விஜய்க்கு பதில் நவரச நாயகன் கார்த்திக் நடித்த இருந்தது. ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட சம்பள பிரச்சினை காரணமாக அவருக்கு பதில் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் பின்னர் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.