திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நரி தந்திரத்துடன் செயல்படும் நிரூப்.. ஆகா! அவனா நீ? புரிந்து கொண்ட போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு, தற்போது ராஜு, நிரூப், பிரியங்கா, பாவனி, அமீர், சிபி, தாமரைச்செல்வி  ஆகிய ஏழு போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இன்னிலையில் பிக் பாஸ் வீட்டில் யார் வெற்றியாளர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழல் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ராஜு, நிரூப், பிரியங்கா, பாவனி, சிபி, தாமரைச்செல்வி ஆகிய 6 பேரில் ஒருவர் மக்கள் அளிக்கும் குறைந்த ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றப்பட உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று பிக் பாஸ், வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்வதற்காக மாலைகளை கொடுத்தார். அப்போது நிரூப் ராஜூவை நாமினேட் செய்தார். ஆனால் நிரூப், ராஜுவை நாமினேட் செய்யும்போது சொன்ன காரணம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏனென்றால் ராஜு என்ன தப்பு செய்தாலும் அவருக்கு நிச்சயம் ரசிகர்கள் ஓட்டுப் போடுவார் என்று நாசூக்காக கூறி, ராஜுவுக்கு ஓட்டுப்போடும் ரசிகர்களின் எண்ணத்தை நிரூப் திசை மாற்றி விட்டுள்ளார். அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜு, பிரியங்கா இருவரும் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாக நிலவுவதால் அவர்களை குறி வைத்து நிரூப் நிறைய இடங்களில் தன்னுடைய ஸ்டேட்டஜியை பயன்படுத்துகிறார்.

அத்துடன் நேற்றைய நிகழ்ச்சியில் கூட தாமரையை பணப் பெட்டியை எடுக்க வைப்பதற்காக அவர் மூளைச் சலவை செய்தது அப்பட்டமாக தெரிந்தது. மேலும் தாமரை அந்த சமயத்தில் பணத்தை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்த போது, பணத்தை எடுத்துக் கொள்வது தப்பான முடிவு அல்ல என்று மறைமுகமாக தாமரைக்கு நிரூப் அறிவுரை கூறி, தனது நரி தந்திரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு நிரூப் செய்யும் ஒவ்வொரு செயலும் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. ஆகையால் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நிரூப், குறைந்த ஓட்டுகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று என்ன நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News