தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல படங்களில் நடித்து வந்தவர் காஜல் அகர்வால். ஆனால் சமீபகாலமாக காஜல் அகர்வாலுக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது கைவசம்மாக தற்போது இந்தியன் 2 படம் மட்டுமே உள்ளது.
இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார் மற்றும் இப்படத்தை ஷங்கர் இயக்குவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போதே எழுந்துள்ளது.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அத்துமீறி நடந்து கொண்டிருக்கின்றனர். பல நடிகைகளிடம் ஆபாசமாக கேள்விகள் கேட்பது மற்றும் நடிகைகளின் உறவினர்களை பற்றி அவதூறாக பேசுவது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது காஜல் அகர்வாலின் தங்கச்சியும் நடிகையுமான நிஷா அகர்வாலிடம் ரசிகர் ஒருவர் காஜல் அகர்வாலின் கணவரைப் பற்றி கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அது என்ன கேள்வி என்றால் காஜல் அகர்வாலின் கணவர் பணக்காரரா எப்படிப்பட்டவர் என கேள்வி கேட்டுள்ளார்.
அதனைப் புரிந்து கொண்ட நிஷா அகர்வால் சூசகமாக அந்த ரசிகருக்கு காஜல் அகர்வாலின் கணவர் குணத்தில் பணக்காரர் என்றும், நல்ல மனம் கொண்டவர் என அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த தகவலை காஜல்அகர்வால் மற்றும் அவரது கணவர் கௌதம்விற்க்கும் சமூக வலைதளத்தில் டேக் செய்துள்ளார். தற்போது இந்த பதிவை பார்த்த ஒரு சில ரசிகர்கள் நிஷா அகர்வாலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.