வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிரபாஸ் அப்படின்னா யாரு என கேட்ட நடிகை.? 10 வருடமா வச்சு செய்யும் சினி உலகம்

நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இருப்பினும் தமிழ் மொழியை விட இவருக்கு தெலுங்கு மொழியில் தான் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அதனால் தற்போது வரை தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி பல படங்கள் நடித்து வருகிறார்.

நடிகைகள் பொறுத்தவரை எப்போதும் வதந்திகள் வந்த வண்ணம் இருக்கும். அதற்கு நடிகைகள் ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் தவறாக புரிந்து கொள்ளும் நபர்களும் ஒரு காரணம். அப்படிதான் நித்யா மேனன் சொன்ன ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொண்டு தற்போது வரை அதற்கு அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அதாவது நித்யா மேனன் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பல்வேறு விதமான கேள்விகள் கேட்டுள்ளனர். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து வந்த நித்யா மேனன் ஒரு கட்டத்திற்கு பிறகு சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருந்துள்ளார். அப்போது நித்யா மேனனிடம் பிரபாஸ் உங்களுக்கு தெரியுமா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நித்யா மேனன் பிரபாஸ் யார் என எனக்கு தெரியாது என கூறியுள்ளார். இது 10 வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி அப்போது நித்யா மேனன் பெரிய நடிகையும் கிடையாது. அதே போல் பிரபாஸும் பெரிய நடிகரும் கிடையாது. அப்போது சினிமாவில் இருவரும் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த காலம் இதனால் அப்போது சில நாட்கள் மட்டும் இந்த சர்ச்சை நீடித்தது.

பிரபாஸ் அனைவருக்கும் தெரியக்கூடிய நடிகராக மாறியது பாகுபலி படத்திற்கு பிறகுதான் ஏனென்றால் இப்படம் தான் இவரை உலக அளவில் கொண்டு சேர்த்தது. இப்போது பிரபாஸ் தெரியாத ஆட்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு தற்போது பிரபலமாக உள்ளார்.

ஆனால் நித்யா மேனனுக்கு உண்மையாலுமே அப்போது பிரபாஸ் யார் என்று தெரியாதாம். ஆனால் அதனை தவறாக புரிந்து கொண்டு சில நபர்கள் தன்னைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததாக கூறியுள்ளார். 10 வருடங்களாகியும் தற்போது வரை இந்த விஷயம் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News