திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ப்ளீஸ் என்ன அப்படி கூப்பிடாதீங்க.. தனுஷால் ரசிகர்களிடம் அவமானப்பட்ட நித்யாமேனன்

தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வருகிறது. ஓடிடி தளத்தில் அவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் ஒன்றரை வருடத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் படம் தியேட்டரில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். நித்யா மேனன், ராசி கன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது சோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் தான்.

Also Read : திருச்சிற்றம்பலம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வரிசையில் சேருமா.? ஆறே நாளில் வாயை பிளக்க வைத்த வசூல்

அவருடைய இயல்பான சிரிப்பு மற்றும் நடிப்பின் காரணமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் வெளியான பிறகு பல்வேறு ஊடகங்களுக்கு நித்யா மேனன் பேட்டி அளித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிளாக தாய்க்கிழவி பாடல் வெளியானது.

அந்தப் பாடல் தனுஷ் நித்யா மேனனுக்காக பாடியிருப்பார். இதனால் பல்வேறு ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் நித்யா மேனனை செல்லமாக தாய்க் கிழவி என்று அழைத்து வருகிறார்கள். இது பிடிக்காத நித்யாமேனன் ப்ளீஸ் என்ன அப்படி கூப்பிடாதீங்க என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Also Read : இந்த ரெண்டு படத்தோட அட்டை காப்பி தான் திருச்சிற்றம்பலம்.. தனுஷ் வசூலை அள்ள இதுதான் காரணம்

அதையும் கோபப்படாமல் சிரித்துக்கொண்டே ரசிகர்களுக்கு பிடிக்கும் படி நித்யா மேனன் சொல்லி உள்ளார். நாட்டாமை படத்தின் மூலம் அனைவருக்கும் பரிட்சயமான தாய்க்கிழவி என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று தனுஷ் இந்த யோசனையை செய்துள்ளார்.

ஆனால் அது நித்யா மேனனுக்கு அடைமொழி பெயராக வந்துள்ளது. இந்நிலையில் நித்யா மேனனின் வேண்டுகோளுக்கிணங்க ரசிகர்கள் இனி தாய்க்கிழவி என்று அழைக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலமாக நித்யா மேனனுக்கு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வர அதிக வாய்ப்புள்ளது.

Also Read : தனுஷ் தேர்ந்தெடுத்த 3 நடிகைகள்.. கடைசி நேரத்தில் மாற்றியதால் தப்பித்த திருச்சிற்றம்பலம்

Trending News