தனுஷின் இட்லி கடை படம் தாய்லாந்தில் சூட்டிங் நடைபெற்று வந்தது. பல ஆர்டிஸ்ட்டுகள் நடிக்கும் காம்பினேஷன் காட்சிகள் என்பதால் இதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டது. தற்சமயம் தாய்லாந்து சூட்டிங் சீன்களை முடித்துவிட்டு திரும்பிய பட குழு ராமநாதபுரத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்து வருகிறது
அருண் விஜய் சம்பந்தமான சீன்கள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சிகளை முடித்துவிட்டு பூசணிக்காய் உடைக்கிறார்கள். இதற்கிடையில் தாய்லாந்து படப்பிடிப்பை பாதி பூசிமழுப்பி தான் எடுத்துள்ளனர் ஒரு பாடல் காட்சிபடமாக்கப்படாமல் இருக்கிறதாம்.
இந்த படத்தில் நடித்து வரும் நித்தியாமேனன் இப்பொழுது உடம்பு சரியில்லை என்று கூறி சூட்டிங் வராமல் டபாய்கிறாராம். ஆரம்பத்தில் அவர் கால்ஷீட் எல்லாம் வீணடிக்கப்பட்டுள்ளது, இவர் ஷூட்டிங் ஸ்பாட் வந்த பிறகும் கூட இவர் சம்பந்தமான காட்சிகள் எடுக்காமல் டம்மியாக அமர வைக்கப்பட்டிருக்கிறார்.
இப்பொழுது நித்யா மேனன் இது என்னுடைய நேரம் என ஷூட்டிங் வராமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வேலை அவருக்கு உண்மையாக உடம்பு சரி இல்லையா அல்லது கால் சீட்டுகளை வீரியம் செய்ததால் இப்பொழுது அவர் நேரம் வந்தவுடன் மல்லு கட்டுகிறாரா என்பது தெரியவில்லை.
இட்லி கடை படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், ஷாலினி பாண்டே ,சமுத்திரகனி போன்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து காம்பினேஷன் சாட்சிகள் எடுப்பதில் சிரமப்பட்டு வந்துள்ளார் தனுஷ். இதில் இப்பொழுது நித்யாமேனன் வேறு தனியாக குடைச்சல் கொடுத்து வருகிறார்.