திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கேடுகெட்ட அந்தப் பழக்கத்தால் கோமாவுக்கு சென்ற நித்யானந்தா.. உச்சகட்ட பதட்டத்தில் கைலாசா

இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நித்யானந்தாவை மக்கள் பலரும் சிவ அம்சம் கொண்டவராகவே பார்த்து வந்தனர். ஆனால் அதெல்லாம் அந்த ஒரு வீடியோவை பார்க்கும் வரையில் மட்டுமே. சில வருடங்களுக்கு முன்பு நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அதுநாள் வரையில் நித்தியானந்தாவின் ஆசிரமவாசிகளுக்கு மட்டுமே தெரிந்த அவருடைய உண்மை முகம் வெளியுலகுக்கு தெரிய வந்தது. மேலும் அவர் மீது சிறுமிகள் கடத்தல் வழக்கு, பாலியல் குற்றம் போன்ற பல வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இப்படி மிகப்பெரும் குற்றவாளியாக பார்க்கப்பட்ட நித்யானந்தா சில வருடங்களுக்கு முன் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் தங்க கட்டியாக மாற்றிக்கொண்டு கைலாசா என்ற ஒரு தீவில் சென்று ஒளிந்து கொண்டார். மேலும் அங்கு இருந்தபடியே அவர் பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால் சில மாதங்களாக அவர் பற்றிய எந்த தகவலும் தெரியாத நிலையில் அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது இதைக் கேள்விப்பட்ட நித்யானந்தா நான் சாகவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன் என்று கடிதம் எழுதி தெளிவுபடுத்தினார். இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

பல பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுடனும் உறவில் ஈடுபட்டு வந்த நித்யானந்தா அதற்காக வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது போன்ற மாத்திரைகள் சிறுநீரகத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியும் நித்யானந்தா அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

அதனால் அவருக்கு தற்போது சிறுநீரகத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காகனால் சிகிச்சை பெற்று வந்த நித்யானந்தாவின் உடல்நிலை தற்போது படு மோசமாகி அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் அவர் தங்க கட்டிகளாக மாற்றி விட்டதால் தற்போது சிகிச்சைக்கும் பணம் இல்லாமல் தவித்து வருகிறாராம். இதனால் தற்போது கைலாசாவில் அவருடைய சிஷ்யர்கள் உச்சகட்ட பதட்டத்தில் இருக்கின்றனர். எப்படியாவது அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சிகிச்சைகள் மேற்கொள்ளவும் அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

Trending News