பணக்கார கடவுள் என்றால் ஏழுமலையானை சொல்வார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் அட்சய திருதை என்பதால் கண்டிப்பாக ஒரு கிராமவாவது தங்க நகை வாங்க வேண்டும் என்று பலர் நகை கடைகளில் அலைமோதுவார்கள். அதுவும் இப்போது விற்கும் தங்கத்தின் விலைக்கு ஒரு கிராம் என்பதே நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக் கனியாக தான் இருக்கிறது.
ஆனாலும் அட்சய திருதிக்கு நகை வாங்குவது தமிழ் கலாச்சாரத்தில் ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் நித்தியானந்தா நேற்று அட்சய திருதியை முன்னிட்டு ஏழுமலையான் கெட்டப்பில் பட்டை நாமாத்துடன் வெளியிட்ட புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பதி வெங்கடாஜலபதி போல் உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்தது போல் சிரித்த முகத்துடன் காட்சி கொடுக்கிறார். நித்தியானந்தா மோசமான வழக்கில் சிக்கிய தலைமுறைவு ஆகிவிட்டார். கற்பனை தேசமான கைலாசாவல் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஏழுமலையான் கெட்டப்பில் நித்தியானந்தாவின் புகைப்படம்
சமீபத்தில் அவரது உடல் நலக்குறைவாக இருப்பதாக போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியானது. இதனால் அவரது பக்தர்களின் கவலை கொண்டிருந்தனர். ஆனால் அதைத்தொடர்ந்து சிவன், ஏழுமலையான் போன்ற புகைப்படங்களில் காட்சி கொடுத்திருக்கிறார்.
கைலாச எங்கிருக்கிறது, எப்படி போட்டோ வெளியாகிறது என்பது தற்போது வரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. யாராலும் நித்தியானந்தாவை நெருக்க முடியாத இடத்தில் இருக்கிறார். மேலும் இப்போது வெளியான ஏழுமலையான் கெட்டப் அவருக்கு பக்காவாக பொருந்தி உள்ளதாக இணையத்தில் கமெண்ட் வருகிறது.
மேலும் இணையவாசிகள் நித்யானந்தாவின் புகைப்படத்தை ட்ரோல் செய்து இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். ஆனாலும் சல்லடை போட்டு தேடினாலும் சிக்காத இடத்தில் தான் தற்போது நித்தியானந்தா இருக்கிறார்.