தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜ் இந்தியனாக இருந்தாலும் அவர் பத்து வருடமாக துபாயில் தான் தங்கி மாடலிங்கில் பணியாற்றி வந்தார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் “மிஸ் இந்தியா” பட்டத்தை வென்றார். அதன் பிறகு தான் சினிமாவில் கால் தடம் பதிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் முதலில் வெளியான ஒருநாள் கூத்து திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கு மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தற்போது கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான வைகுண்டபுரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.நடிகைகளைப் பொறுத்தவரை உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார்கள்.

அதற்காக நடிகைகள் ஜிம் வொர்க் அவுட் செய்வது ஒன்றும் புதிதல்ல.அந்த வரிசையில் தற்போது நிவேதா பெத்துராஜ் இறுக்கமான உடையில் ஜிம் வொர்க் அவுட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது நிவேதா பெத்துராஜ் உடல் எடையை குறைத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிவேதா பெத்துராஜ்அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர் தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது